Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) நடத்தப்படும் விருது வழங்கும் விழாவில் செலிங்கோ லைஃப்பின் ஸ்திரப்பாடு மீண்டும் ஒரு தடவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2015 வர்த்தக முத்திரை சிறப்பு விருது வழங்கும் விழாவில் மூன்று முக்கிய வகைப்படுத்தல் பிரிவின் கீழ் இரண்டு வெள்ளி விருதுகளை செலிங்கொ லைஃப் வென்றுள்ளது.
இந்த வருடத்துக்கான சேவைச் சின்னப் பிரிவில் செலிங்கோ லைஃப் வெள்ளி விருதை வென்றது. சேவைத் துறையில் உள்ள சகல வர்த்தக பிரிவுகளையும் கடந்து இந்த விருது வெல்லப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான உள்ளுர் வர்த்தக முத்திரை பிரிவில் மற்ற வெள்ளி விருது வெல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் முன்னணி வர்த்தக முத்திரையாக அது இடம்பிடித்துள்ளது.
'இந்த விருது சேவைகன் எமது ஸ்திரப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இது தொடர்ச்சியாக அதன் பணியிலும் தூர நோக்கிலும் கவனம் செலுத்தும் ஒரு வர்த்தக இலச்சினையாகத் திகழுகின்றது' என்று கூறினார் செலிங்கோ லைஃப்பின் பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டி.ரணசிங்க. '2004 முதல் செலிங்கோ லைஃப் ஒவ்வொரு வருடமும் அதன் தலைமைத்துவத்தை மட்டும் சந்தையில் நிலைநிறுத்தி வரவில்லை. இதே காலப்பகுதியில் அது உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளது. இவை கம்பனியின் ஸ்திரப்பாட்டை கோடிட்டுக் காட்டும் வகையிலேயே அமைந்துள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.
SLIM விருதுகள் மிகவும் போட்டித்தன்மை மிக்கவை. நுகர்வோர் ஆராய்ச்சி தொடர்பான வர்த்தகச் சின்ன ஆரோக்கியம், நிதிச் செயற்பாடு, வர்த்தக முத்திரையை கட்டி எழுப்பும் செயற்பாட்டில் ஆழமான மதிப்பீடு என்பனவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான ஒரு ஸ்திரமான அங்கிகாரமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
வர்த்தகச் சின்னத்தின் மூலோபாய முக்கியத்துவம், நீண்ட கால தூரநோக்கு மற்றும் பணி,வர்த்தகச் சின்ன உள்ளடக்கம், பெறுமானம், வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகச் சின்னப் படங்கள் வெளிப்படுத்தப்பட்ட விதம், வர்த்தகச் சின்ன செயற்பாடு, வர்த்தக பெறுமான ஒதுக்கீடுகள், ஏனைய போட்டியாளர்களோடு காணப்படும் பிரதான வேறுபாடுகள், மூலோபாய நிலைகள், செயற்பாட்டு மூலோபாய நிலைகள், வர்த்தகச் சின்ன தொடர்பாடல் மூலோபாயம் என பல விடயங்கள் விருதுக்கான தெரிவின் போது கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
வர்த்தக முத்திரைச் செயற்பாட்டின் போது நிதிப்பிரிவும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. கம்பனியின் ஆயுள் நிதியம் அதன் நிதி ஸ்திரப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதன் கடன் தீர்வு எல்லை, வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் உரிமை கோரல்கள், சந்தைப் பங்கு, பெறுமதி மற்றும் பெறுமான வளர்ச்சி, இலாப நிலை என்பனவும் நிதி ஸ்திரப்பாட்டை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வர்த்தகச் சின்ன ஆரோக்கியம், வர்த்தக முத்திரை விழிப்புணர்வு, வர்த்தகச் சின்ன மீள் அழைப்பு, வர்த்தகச் சின்ன சமத்துவம் என்பனவற்றை உள்ளடக்கிய வாடிக்கையாளர் ஆராய்ச்சியை கொண்டதாக அமைந்துள்ளது.
2014 டிசம்பர் 31ல் முடிவடைந்த ஆண்டில் செலிங்கோ லைஃப் நிறுவனம் 18.54 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தைக் கொண்டிருந்தது. இதில் சந்தா வருமானம் 12 பில்லியன் ரூபாவாகும். முதலீட்டு வருமானம் 6.83 பில்லியன்களாகும். கம்பனியின் முதலீடுகளின் பெறுமதி 57.2 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. சொத்துக்களின் பெறுமதி 71.07 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. ஆயுள் நிதியம் 60.02 பில்லியன்களாக உள்ளது. இந்த ஆண்டு காலப்பகுதியில் வாடிக்கையாளர்கள் 4.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை நலன் கொடுப்பனவாகப் பெற்றுள்ளனர். இது முதிர்ச்சி கால கொடுப்பனவுகள், ஏனைய நலக் கொடுப்பனவுகள், உரிமை கோரல் கொடுப்பனவுகள் மற்றும் வருடாந்த போனஸ் கொடுப்பனவுகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த செயற்பாடுகளுக்கு பிரிட்டனை மையமாகக் கொண்டு செயற்படும் உலக கீர்த்திமிக்க சஞ்சிகையான வேர்ள்ட் பினான்ஸ்ஸின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அண்மையில் 'இலங்கையின் மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதிக் கம்பனியாக' செலிங்கோ லைஃப்பை வேர்ள்ட் பினான்ஸ் தெரிவு செய்துள்ளது. 2015ல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
உள்ளுர் ஆயுள் காப்புறுதிக் கம்பனிகளுள் ஆகக் கூடுதலான 250 கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள கம்பனியும் இதுவேயாகும். நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 142 நகரங்கள் மற்றும் புற நகரங்கள் கிராமங்களில் இந்தக் கிளைகள் அமைந்துள்ளன. பத்து லட்சத்துக்கும் திகமான செயற்படு நிலையில் உள்ள காப்புறுதி கொள்கைகளையும் அது கொண்டுள்ளது. உள்ளுர் காப்புறுதி துறையில் உற்பத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் பல அங்கீகார விருதுகளையும் அது வென்றுள்ளது.
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025