2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

SLT-MOBITEL mSpace Code Blast Hackathon 2023 முன்னெடுப்பு

Freelancer   / 2023 நவம்பர் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாக்கமான தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தியிருந்த coding ஆர்வலர்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்த புத்தாக்கவியலாளர்களை ஒன்றிணைத்து, SLT-MOBITEL mSpace Code Blast Hackathon 2023 நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL மற்றும் hSenid Mobile ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த Hackathon ஊடாக, coders மற்றும் non-coders க்கு கைகோர்த்து, புத்தாக்கமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை வடிவமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது.

mSpace Code Blast Hackathon 2023 இல் பங்கேற்றிருந்தவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியிருந்ததுடன், மூன்று அணியினர் முன்னிலையாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இன்றைய காலகட்டத்தில் பிரயாணிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைக்கு தீர்வை வழங்கியிருந்த Team Denkers வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாமிடத்தை மொழி பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான தீர்வை வடிவமைத்திருந்த Team SinhalaGPT பெற்றுக் கொண்டது. இந்தப் புத்தாக்கமான தீர்வினூடாக மொழி இடைவெளியை நிவர்த்தி செய்து, குடிமக்களுக்கு மேம்படுத்திய அணுகலை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்திருந்தது.

மூன்றாமிடத்தை தமது புரட்சிகரமான app வெளியிட்டிருந்த Team Fine Pay தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் தண்டப் பணத்தை செலுத்தும் முறைமையை எளிமைப்படுத்துவதற்கு நீண்ட காலமாக நிலவிய தேவையை நிவர்த்தி செய்வதாக இந்த தீர்வு அமைந்திருந்தது.

புத்தாக்கத்துக்கும் தொழில்நுட்பமுயற்சியாண்மைக்கும் ஆக்கத்திறன், பிரச்சனையை தீர்த்தல் மற்றும் கைகோர்ப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து வாய்ப்பளிப்பதாக Hackathon அமைந்திருந்தது. பிரயோக ரீதியான அனுபவத்தையும், பெறுமதி வாய்ந்த இணைப்புகளையும் தொழில்நுட்பத்துறையில் வழங்குவதாக அமைந்திருந்தது.

பல்வேறு பின்புலன்களைச் சேர்ந்தவர்களுக்கு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக SLT-MOBITEL mSpace அமைந்துள்ளது. mSpace கட்டமைப்பினூடாக வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பில் ஈடுபடாதவர்களுக்கு வலுவூட்டி, mSpace கட்டமைப்பினூடாக பணம் சார் தீர்வுகளை கட்டியெழுப்ப உதவிகளை வழங்குவதாக அமைந்துள்ளது. வடிவமைப்பாளர்களால் தமது coding திறன்களை பயன்படுத்தி, mSpace இன் ஆழமான APIs இல் ஒன்றிணைப்பதற்கு வழிகோலப்பட்டுள்ளதுடன், வடிவமைப்பில் ஈடுபடாதவர்களால், mSpace'இன் அப்ளிகேஷன்களை வினைத்திறனான வகையில் வடிவமைத்து வழங்க முடிந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .