2025 ஜூலை 12, சனிக்கிழமை

SLT-MOBITEL ஆய்வை முன்னெடுக்க புலமைப்பரிசில்

Freelancer   / 2025 ஜூலை 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, சூழல் நிலைபேறாண்மைக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், கொழும்பு, வயம்ப மற்றும் ஊவா வெல்லஸ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று பட்டம் பயிலும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது. ஆய்வு அடிப்படையிலான புலமைப்பரிசில் வழங்கலினூடாக, இலங்கையில் நீல காபன் சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்பான கற்கைகளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், இந்த முக்கியமான சூழல் சொத்துகள் தொடர்பான ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆய்வு என்பது கட்டாய அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ள, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொண்டுள்ள சகல பட்டதாரி மாணவர்களுக்கும் SLT-MOBITEL புலமைப்பரிசில் திட்டத்தில் பங்கேற்க முடியும். இந்த முயற்சி ஒரு மதிப்புமிக்க களமாக செயல்படுவதுடன், இளம் ஆய்வாளர்கள் நீல கார்பன் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அறிவியல் ஆய்வுகள் மற்றும் புத்திசாலித்தனமான மேலாண்மைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க அதிகாரமும் அளிக்கிறது.

2024 ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட புலமையாளர்கள் தங்கள் ஆய்வை முடிக்க நிதி உதவி பெற்றுள்ளதுடன், இந்த முக்கியமான பகுதியில் நேரடி அனுபவத்தைப் பெற்று அறிவை மேம்படுத்தியுள்ளனர். 250,000 ரூபாய் வரை மதிப்புள்ள ஒவ்வொரு உதவித்தொகையும், பெறுனர்களுக்கு நடைமுறை பயன்பாடுகளை ஆராயவும், நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கவும், புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபடவும், அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடவும் வாய்ப்பளித்திருந்தது.

உயிரியல், சூழலியல், மறுசீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் நீல காபன் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான பயன்பாடு போன்ற பகுதிகளை ஆய்வு தலைப்புகள் உள்ளடக்கியிருந்தது. மேலும், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அவற்றை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையிலான தொடர்புகளை பகுப்பாய்வு செய்ய மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

விண்ணப்பதாரர்கள் SLT-MOBITEL ஒன்லைன் போர்டல் வழியாக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குறிப்பிட்ட அளவுகோல்களுடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நிபுணர்கள் குழுவின் முன் தங்கள் ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.

இதுவரை பெறுனர்கள் antifungal property exploration, total ecosystem carbon stock estimation மற்றும் saltmarsh vegetation characterization போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளதாக SLT-MOBITEL குறிப்பிட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தினூடாக, கல்விசார் சிறப்பை ஊக்குவித்தல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நீண்ட கால அடிப்படையில் சூழல் மற்றும் சமூக அனுகூலங்களை ஏற்படுத்தித் தரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது. SLT-MOBITEL இன் சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அர்ப்பணிப்புகளுக்கமைய அதன் அங்கமாக இந்த நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டதுடன், ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு (SDGs) பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .