2024 மே 04, சனிக்கிழமை

SLT-MOBITEL இன் நவீன புத்தாக்கங்களுக்கு கௌரவிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தேசிய செயற்திட்ட முகாமைத்துவ சிறப்புகள் (NPME) விருதுகள் 2023 இல், நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நவீன புத்தாக்கம் மற்றும் மாற்றத்தை முன்னெடுப்பதற்கான ஆற்றல் போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்தமைக்காக ஐந்து உயர் கௌரவிப்புகளைப் பெற்றுக் கொண்டது. NPME மாநாடு மற்றும் விருதுகள் 2023 நிகழ்வை, இலங்கை செயற்திட்ட முகாமைத்துவ நிறுவகம் (PMI) அண்மையில், கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.   

அமெரிக்காவின் செயற்திட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் உத்தியோகபூர்வ அமைப்பாக இலங்கை செயற்திட்ட முகாமைத்துவ நிறுவகம் (PMI) திகழ்கின்றது. இலாகா முகாமைத்துவ பணி, செயற்திட்டம் மற்றும் நிகழ்ச்சித்திட்டம் போன்றவற்றுக்கான உலகின் முன்னணி நிபுணத்துவ அமைப்பாக PMI காணப்படுகின்றது.

Robotics, artificial intelligence, தொலைத்தொடர்பாடல்கள், கல்வி, ஆய்வு, விவசாயம் மற்றும் கால்நிலை அபிவிருத்தி போன்ற துறைகளில் முன்னேற்றங்களை பதிவு செய்திருந்தமை மற்றும் சிறந்த சாதனைகளை பதிவு செய்திருந்தமை போன்றவற்றுக்காக இந்த விருதுகளை நிறுவனம் பெற்றுக் கொண்டது.

SLT-MOBITEL இன், Embryo Innovation Center க்கு, Best Managed Project in Robotics and Artificial Intelligence for the Raccoon AI Solution பிரிவில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தாக்கமான வியாபார மதிநுட்ப (BI) கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட இயந்திர பயிலல்களை பயன்படுத்துவதுடன், தமது தரவுகளிலிருந்து செயலாற்றக்கூடிய பிரித்தெடுக்கக்கூடிய செயற்பாடுகளை வியாபாரங்கள் பெற்றுக் கொள்வதற்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. கட்டமைப்பினால் வடிவமைப்புகள் மற்றும் போக்குகள் இனங்காணப்பட்டு, எதிர்கால போக்குகளுக்கு எதிர்வுகூரல்கள் வழங்கப்படுகின்றன. இதனால், வியாபாரங்களுக்கு செயற்பாடுகளை சீராக்கம் செய்து, தகவல்களுடன் கூடிய தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

SLT-MOBITEL இன் Omnichannel Experience for Customers and Customer Touch Points திட்டத்துக்காக, Best Managed Project in Telecommunications Sector பிரிவின் வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பிரிவினூடாக, வாடிக்கையாளர் ஈடுபாடு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பாடல் நாளிகைகளினூடாக இணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த வாடிக்கையாளர் மையப்படுத்திய செயற்திட்டத்தினூடாக, கட்டமைப்புகளிடையே நிலை மாற்றங்களை இலகுவாக மேற்கொள்ள முடிவதுடன், உரையாடல்களின் தொடர்ச்சித் தன்மை உறுதி செய்யப்பட்டு, தொடர்பாடல் அனுபவம் மேம்படுத்தப்படுகின்றது.

SLT-MOBITEL அரசாங்க வியாபார பிரிவின் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (NWSDB) தொடர்பாடல் நிலைய தீர்வுக்காக Runner-up award for the best managed project in government sector விருதைப் பெற்றுக் கொண்டது. இந்தத் தீர்வினூடாக, NWSDB வாடிக்கையாளர் ஈடுபாடு மேம்படுத்தப்பட்டதுடன், அதற்காக 24/7தகவல் பகுதி மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் போன்றன நிறுவப்பட்டிருந்தன.

மேலும், SLT-MOBITEL, The Embryo Innovation Center க்கு மற்றுமொரு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் Fazenda Smart Agro Solution தீர்வுக்காக Runner-up prize for ‘Best Managed Project in Agriculture and Livestock Development Sector விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த டிஜிட்டல் மயமாக்கத்தினூடாக, விவசாயிகளுக்கு பெருந்தோட்டங்களின் முக்கிய பிரிவுகளை கண்காணிக்க உதவுவதுடன், உர பிரயோகம் தொடர்பில் தீர்மானமெடுத்தல்கள் தொடர்பான பெறுமதியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

SLT-MOBITEL இன் விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இலங்கையின் தொழில்நுட்ப கட்டமைப்பில் நிறுவனத்தின் கீர்த்தி நாமத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் NPME மாநாடு மற்றும் விருதுகளினூடாக கீர்த்தி நாமத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .