2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

SLT முதல் அரை நிதியாண்டில் வலுவான செயற்திறன், கணிசமான இலாப வளர்ச்சி

Freelancer   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 இரண்டாம் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டு காலப்பகுதியில் SLT குழுமம் உறுதுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. அதனூடாக இலாபகரத்தன்மை மற்றும் செலவு முகாமைத்துவ மூலோபாயங்களில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

2025 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டில், SLT குழுமம் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2.3 பில்லியனை பதிவு செய்திருந்தது. 2024 இரண்டாம் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 479 மில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில் இது சிறந்த முன்னேற்றமாகும். நிறுவன மட்டத்தில், ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி முன்னைய ஆண்டில் பதிவு செய்திருந்த வரிக்கு பிந்திய நட்டம் ரூ. 14 மில்லியன் உடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ரூ.  1.3 பில்லியனை இலாபமாக பதிவு செய்துள்ளது. மொபிடெல், 2024 இரண்டாம் அரையாண்டில் பதிவு செய்திருந்த ரூ. 610 மி்ல்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில், ரூ. 587 மில்லியனை இலாபமாக பங்களிப்புச் செய்திருந்தது.

குழுமத்தின் அரையாண்டு நிதிப் பெறுபேறுகளும் சிறப்பானதாக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டில் ரூ. 323 மில்லியன் நட்டத்தை பதிவு செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ரூ. 4.3 பில்லியனாக உயர்ந்திருந்தது. கம்பனி மட்டத்தில், ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி முன்னைய ஆண்டில் பதிவு செய்திருந்த ரூ. 272 மில்லியனுடன் ஒப்பிடுகையில், 873% ஆல் உயர்ந்து ரூ. 2.6 பில்லியனை பதிவு செய்துள்ளது. மொபிடெல் வரிக்கு பிந்திய இலாபம் கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 1.1 பில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில், குறிப்பிடத்தக்களவு மீண்டுள்ளது. ரூ. 1.1 பில்லியனை வரிக்குப் பிந்திய இலாபமாக பதிவு செய்து, உறுதியான நிதி முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

சிறந்த நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் SLT குழும தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “SLT குழுமம், கடந்த ஆண்டில் பதிவு செய்திருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் பதிவு செய்துள்ள உறுதியான அரையாண்டு நிதிப் பெறுபேறுகளினூடாக, நிறுவனத்தின் நீண்ட கால நிலைத் தன்மையும், திறமையான செயற்பாட்டு வினைத்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த முன்னேற்றத்தினூடாக குழுமத்தினுள் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மூலோபாய செயற்பாடுகள் மற்றும் உறுதியான நிர்வாக ஆளுகை செயற்பாடுகள் போன்றவற்றின் தாக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எமது நிலையான இலாபகரத்தன்மை மற்றும் கட்டுப்பாடான செயற்பாடுகள் போன்றன SLT ஐ அர்த்தமுள்ள வகையில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யச் செய்துள்ளதுடன், சகல பங்காளர்களுக்கும் உறுதியான பெறுமதியை பெற்றுக் கொடுக்கவும், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பிரதான செயற்பாட்டாளராக திகழவும் வழிகோலியுள்ளது.” என்றார்.

இலாபகரத்தன்மையை நோக்கிய நகர்வு

2025 இரண்டாம் காலாண்டில், குழுமம் முன்னயை ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொழிற்பாட்டு இலாபத்தில் 148% உயர்வை பதிவு செய்துள்ளது. இதில் SLT நிறுவனம் 61% வளர்ச்சியையும், மொபிடெல் வியப்பூட்டும் அதிகரிப்பான 14050% உயர்வை பதிவு செய்து, முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த பலவீனமான பெறுபேறுகளிலிருந்தான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது.

2025 இரண்டாம் காலாண்டில் SLT குழுமம் ரூ. 27.3 பில்லியன் வருமானத்தை பதிவு செய்திருந்தது. இது 2.6% வளர்ச்சியாகும். இதில் SLT நிறுவன ரீதியில் ரூ. 17.7 பில்லியனை பதிவு செய்திருந்தது. இது SLT நிறுவன ரீதியான 2.5% வளர்ச்சியாகும். மொத்தத்தில் குழுமத்தின் காலாண்டு பெறுபேறுகள் வளர்ச்சியில் மொபிடெலின் உறுதியான நிதிசார் வளர்ச்சியான 6.4% பங்களிப்பு செலுத்தியிருந்தது.

 

இலக்கு வைக்கப்பட்ட செலவுக்கட்டுப்பாடு மற்றும் சிக்கனத்தன்மை

2025 இரண்டாம் காலாண்டில், குழுமத்தின் பரந்த செலவு கட்டுப்படுத்தல் செயற்பாடுகளினூடாக சிறந்த பெறுபேறுகள் எய்தப்பட்டிருந்தன. ஒட்டு மொத்த நேரடி செலவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.5% இனால் குறைந்திருந்தன. SLT 10.3% செலவுக் குறைப்பையும், மொபிடெல் தனது நேரடி செலவுகளில் 4% குறைப்பையும் பதிவு செய்திருந்தன.

காலாண்டு விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகள் குழும மட்டத்தில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.2% இனால் அதிகரித்திருந்தன. சந்தை விரிவாக்க செயற்பாடுகளில் SLT இன் முதலீடுகள் இதில் பிரதானமான பங்களிப்பைச் செய்திருந்தன. சந்தைப்படுத்தல் செலவுகளில் 17% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.  எவ்வாறாயினும், மொபிடெல் தனது சந்தைப்படுத்தல் செலவுகளை 9.1% ஆல் குறைத்துள்ளது குழும மட்டத்தில் நிர்வாக செலவுகள் 7.8% இனால் உயர்ந்திருந்தது. இதில் SLT மற்றும் மொபிடெல் ஆகியன பங்களிப்புச் செய்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .