Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலு உபகரண வர்த்தக நாமமான STIHL உடனான பங்குடமை தொடர்பில் Diesel & Motor Engineering PLC (DIMO) அண்மையில் அறிவித்துள்ளது.
DIMO நிறுவனம், இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி ஸ்தானத்தை வெளிப்படுத்தும் வகையில், அது நாடளாவிய ரீதியில் STIHL உற்பத்திகளுக்கான அங்கிகரிக்கப்பட்ட விநியோகத்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
1926ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட STIHL குழுமமானது, தொழில்சார் காடு வளர்ப்பு, விவசாயம், தோட்டம், நிலப் பராமரிப்பு, கட்டுமானத் துறை, கோருகின்ற தனியார் பாவனையாளர்களுக்கான வலு உபகரணங்களை (Outdoor Power Equipments) உற்பத்தி செய்து வருகின்றது.
இலங்கையிலுள்ள தனது முகவர்கள் மத்தியில் புத்தாக்கமான STIHL உற்பத்தி வரிசையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வானது, அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் நிகழ்வு மய்யத்தில் இடம்பெற்றதுடன், DIMO, STIHL நிறுவனங்களின் முகாமைத்துவ அதிகாரிகள் கலந்து சிறப்பித்துள்ளனர். நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 50க்கும் மேற்பட்ட முகவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். STIHL உற்பத்தி வரிசை, அதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் முகவர்களுக்கு அறிவூட்டப்பட்டது. உற்பத்திகளை நேரடியாக கண்டும், இயக்கியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இந்நிகழ்வின் மூலமாகப் பெற்றுக்கொண்டனர்.
DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எமது தலைசிறந்த விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவையுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்கும் முகமாக DIMO நிறுவனம் எப்போதும் உலகின் மிகச் சிறந்த வர்த்தக நாமங்களுடன் பங்காளராக இணைந்து செயற்பட்டு வந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .