2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

Seylan Sure கணக்கு வைப்பாளர்களுக்கு பரிசுகள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பிரபல்யமான வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டமான (Loyalty Scheme) செலான் ஷுவரை மீளறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கியியல் துறையில் சேமிப்பு மற்றும் நடைமுறை கணக்கு வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை திட்டத்தை அறிமுகப்படுத்திய வங்கியாக செலான் வங்கி விளங்குகிறது.

செலான் ஷுவர் நிச்சயமான வெகுமதிகளை வழங்குவது மட்டுமல்லாது வசதியான வைப்புத் தளங்களையும் வழங்குகின்றமை வங்கியால் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு முன்மாதிரியான முயற்சி ஆகும். இவ் அனுகூலங்கள் சேமிப்புக்கணக்கின் வட்டிக்கு மேலதிகமாக வழங்கப்படுகின்றது. தற்போது தனிப்பட்ட மற்றும் கூட்டு சேமிப்பு மற்றும் நடைமுறை கணக்குகளுக்காக வழங்கப்படும் அதிகூடிய தொகை ரூ.200,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

மேலும் நாட்டின் வங்கித்துறையில் நடைமுறையிலிருந்த குலுக்கல் முறையான பரிசுத்திட்டத்துக்கு மாறாக அனைவருக்குமான பரிசுத்திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதன் மூலம் செலான் வங்கி அதன் தனித்துவத்தை பேணிவருகிறது. வங்கி, வாடிக்கையாளரின் வாழ்வின் முக்கிய தருணங்களின் போது நிச்சயமான பணத்தொகையையும் பரிசுகளையும் வழங்குகிறது. ஏற்கனவே உள்ள பரிசுப் பிரிவுகள் திருமணம், பிரசவம், அறுவை சிகிச்சை மற்றும் 60வது பிறந்தநாள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. எனினும் புதிய பிரிவுகள் வாடிக்கையாளரின் பிள்ளைகளின் தரம் 5 புலமைப் பரிசில், சாதாரண தர மற்றும்

உயர்தர சித்தி மற்றும் 10வது ஆண்டு திருமண நிறைவு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.  
அறுவை சிகிச்சையின் போது வாடிக்கையாளர் ரூ.200,000 ஐ பெற்றுக்கொள்ளலாம். வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பங்களிக்கும் செலான் ஷுவர் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நிச்சயம் இருக்கவேண்டிய திட்டம் ஆகும்.

புதிய பிரிவுகள் ஊடாக வாடிக்கையாளர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி எய்தும் போதும் சாதாரண தரத்தில் 8யு சித்திகள் மற்றும் உயர்தரத்தின் போது 3யு சித்திகளை பெறும் போதும் ரூ. 50,000 வரை வழங்கப்படும். மேலும் தமது 10வது திருமண ஆண்டு நிறைவை கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 வரை பணப்பரிசாக வழங்கப்படும்.  
புதிய செலான் ஷுவர் திட்டம் பற்றி கருத்துத் தெரிவித்த சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதி பொது முகாமையாளர் டிலான் விஜயசேகர, ‘செலான் ஷுவர் திட்டத்தை புதிய அனுகூலங்களுடன் மீளறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். பணப் பரிசுகளை ரூ.15,000 இலிருந்து ரூ.200,0000 வரை அதிகரித்ததன் மூலம் அதிகளவு நன்மைகளையும் பெறுமதியையும் வழங்க தயாராகவுள்ளோம்.

மேலும் நாம் பரிசுப் பிரிவுகளுக்கான தகுதியை விஸ்தரித்துள்ளதன் மூலம் அதிகளவான வாடிக்கையாளர்களுக்கு இப்பரிசுகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளோம். செலான் வங்கி தொடர்ச்சியாக புதிய சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சேமிப்புப் பழக்கத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கின்றது. மேலும் செலான் ஷுவரின் ஒப்பிட முடியாத அனுகூலங்கள் எமது வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என நம்புகின்றோம்.’ என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X