2025 ஜூலை 30, புதன்கிழமை

Shopping Star பருவம் 4 அறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காகில்ஸ் ஃபுட் சிட்டியுடன் இணைந்து யுனிலீவர் ஸ்ரீ லங்கா முன்னெடுக்கும் சொப்பிங் அனுபவமான “ Shopping Star” பருவம் 4 தற்போது மீண்டும் நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான இந்த 4ஆம் பருவ கால சொப்பிங் ஊக்குவிப்புத்திட்டம் நவம்பர் மாத இறுதி வரை முன்னெடுக்கப்படும்.   

தெரிவு செய்யப்பட்ட காகில்ஸ் ஃபுட் சிட்டி விற்பனை நிலையங்களில் முதல் சுற்று “Shopping Star” பருவம் 4 முன்னெடுக்கப்படுவதுடன், மாபெரும் இறுதிப் போட்டிக்காக நாடு முழுவதிலுமிருந்து 10 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நாடு முழுவதிலும் காணப்படும் காகில்ஸ் ஃபுட் சிட்டிகளில் குறிப்பிடப்பட்ட யுனிலீவர் தயாரிப்புகளில் ஆகக்குறைந்தது மூன்றைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கூப்பன் ஊடாக வழங்கப்படும்.

குலுக்கல் முறை மூலமாக அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தப் போட்டியாளர்கள் குறித்தக் காலப்பகுதியினுள் தமது ட்ரொலிகளில் இயலுமானவரை பொருட்களை இட்டு நிரப்ப வேண்டும்.

சகல போட்டியாளர்களும் ரூ. 10,000 பெறுமதியானப் பொருட்களைப் பெறுவார்கள். ஒரு அதிர்ஷ்டசாலி மாவட்ட மட்ட வெற்றியாளர் மட்டும் மாபெரும் இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்படுவார். இவ்வாறு 10 மாவட்ட வெற்றியாளர்கள் மாபெரும் இறுதிப்பரிசான 2 மில்லியன் ரூபாய்க்காக போட்டியிடுவார்கள். இரண்டாம் பரிசாக 1 மில்லியன் ரூபாயும், மூன்றாம் பரிசாக 500,000 ரூபாயும் வழங்கப்படும்.   

“Shopping Star” பருவம் 3இன் வெற்றியாளராகத் தெரிவாகியிருந்த குருநாகலைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். ரமீஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பல ஆண்டு காலப்பகுதியில் நாம் அனுபவித்திருந்த மிகவும் விறுவிறுப்பான சொப்பிங் ஊக்குவிப்புத்திட்டமாக இது அமைந்திருந்தது. “Shopping Star” பருவம் 3இல் நான் வெற்றியாளராகத் தெரிவாகியிருந்த போது எனக்கு எந்தளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பது தற்போதும் எனக்கு நினைவிலுள்ளது.

மாபெரும் இறுதிப்பரிசாக நான் நிஸான் லீஃவ் காரைப் பெற்றிருந்தேன். இந்தப் போட்டி மீண்டும் பல பரிசுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. சகல பங்குபற்றுநர்களுக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.  
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .