Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 14 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
Sun Siyam பாசிகுடா, தேசத்தின் 77ஆவது சுதந்திர தினத்தை அண்மையில் கொண்டாடியது. நாட்டின் சுற்றுலாத் துறை பெருமளவு மீட்சியடைந்துள்ள நிலையில், இந்த வைபவம் கொண்டாடப்பட்டதுடன், கிழக்கு கரையோரத்தின் மாசற்ற கடற்கரைகள், பரந்த உணவுத் தெரிவுகள் மற்றும் பெறுமதி வாய்ந்த கலாசார அனுபவங்களுடன் அமைந்திருந்தது.
இந்த நிகழ்வை முன்னிட்டு Sun Siyam பாசிகுடா, ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுக்காக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. தேசியக் கொடி உயர்த்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், விருந்தினர்கள் மற்றும் ஹோட்டலின் ஊழியர்கள் இலங்கை கொடியை பெருமையுடன் ஏற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.
" Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷெத் ரிபாய் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், உள்நாட்டு சமூகங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதிலும், அதிசிறந்த அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதிலும் Sun Siyam பாசிகுடா தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளது. கிழக்கின் அழகை ரசிப்பதற்காக மாத்திரம் நாம் விருந்தினர்களை வரவேற்பதில்லை, நாட்டின் சுற்றுலாத் துறை மீட்சியில் பொருளாதார பெறுமதி சேர்ப்பினூடாக பங்களிப்பையும் வழங்குகின்றோம். அதற்காக நிலைபேறான மற்றும் சொகுசான விருந்தோம்பலை ஊக்குவிக்கின்றோம்.” என்றார்.
பாரம்பரிய தேனீர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உள்நாட்டின் செழுமையான தேனீர் தெரிவுகளை விருந்தினர்கள் அருந்தி மகிழ்ந்தனர். விசேட கேக் வெட்டும் நிகழ்வும் இதன் போது முன்னெடுக்கப்பட்டது. கலாசார நிகழ்வுகள், இலங்கையின் வரலாறு பற்றிய கதைகூறும் அமர்வுகள் மற்றும் கரையோர விளையாட்டுகள் போன்றன ஒன்றிணைந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தியிருந்தன.
இலங்கையின் சுற்றுலாத்துறை உறுதியான மீட்சியை பதிவு செய்த வண்ணமுள்ளதுடன், 2025 ஜனவரி மாதத்தில் மாத்திரம் 177,000க்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரிப்பாகும். இந்த மீட்சி தொடர்பில் Sun Siyam பாசிகுடா பெருமை கொள்வதுடன், அதில் பங்களிப்பு வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. பயணிகளுக்கு ஒப்பற்ற சொகுசு, கலாசார பெறுமதி மற்றும் மனம்மறவாத அனுபவங்களை இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோரப் பகுதியில் வழங்குகின்றது.
34 அதிக இடவசதிகளைக் கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகள், பூந்தோட்டம் மற்றும் கடற்கரையை முகப்பாகக் கொண்ட பெவிலியன்களைக் கொண்டு அமைந்துள்ளன. உள்நாட்டு கலாசாரத்துடன் இணைவது அல்லது பாசிக்குடாவின் கரையோரத்தில் படகுகளில் சவாரி செய்வது, நட்சத்திரங்களின் கீழ் பிரத்தியேகமான இராப்போசணத்தை அருந்தி மகிழ்வது போன்ற பல சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பிரத்தியேக கரையோர திருமண வைபவங்கள், கூட்டாண்மை சந்திப்புகள் மற்றும் தனிப்பட்ட கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு சிறந்த பகுதியாக இந்த ரிசோர்ட் அமைந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கு ஒப்பற்ற சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கின்றது.
மெருகேற்றல் பணிகளைத் தொடர்ந்து Sun Siyam பாசிகுடா, 2023 நவம்பர் 17ஆம் திகதி மீளத் திறக்கப்பட்டது. Studio Sixty7 உடன் இணைந்து அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த ரிசோர்ட் சிறந்த உள்ளக காட்சியமைப்புகள், வர்ண அமைப்புகளையும் கொண்டுள்ளது.
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Oct 2025
18 Oct 2025