2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

The Suites at Cinnamon Life அறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

Cinnamon Life அதன் இரண்டாவது குடியிருப்பு தொகுதியான ‘The Suites at Cinnamon Life’ என்பதை அறிமுகம் செய்துள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான வோட்டர்ஃபு ரொன்ட் புரொப்பர்டீஸ் (பிரவெட்) லிமிட்டெட்டினால் நிர்மாணிக்கப்படும் 4.5 மில்லியன் சதுர அடியில் அமைந்த ஒன்றிணைக்கப்பட்ட ரிசோர்ட்டின் ஒர் அங்கமாக இந்தக் குடியிருப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.  

இந்த அறிமுக நிகழ்வின் போது ‘The Suites at Cinnamon Life’ க்கான முற்பதிவுகள் 15%ஐ விட அதிகரித்திருந்தன. அதேவேளை, முதலாவது குடியிருப்புத் தொகுதியான The Residence at Cinnamon Life’இன் 50%க்கும் அதிகமான பகுதி ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

உறுதியான நிலையில் ஒன்றிணைக்கப்பட்ட ரிசோர்ட் செயற்றிட்டத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஹுன்டாய் என்ஜினியரிங் மற்றும் கொன்ஸ்ட்ரக்ஷன் ஆகியவற்றின் ஒப்பந்தங்களின் ஊடாக இந்தப் பணிகள் தொடர்கின்றன. 850 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீனத்தில், சினமன் லைஃவ் செயற்றிட்டம் என்பது இலங்கையில் முன்னெடுக்கப்படும் மாபெரும் தனியார் முதலீட்டிலமைந்த செயற்றிட்டமாக அமைந்துள்ளது.  

196 சொகுசான குடியிருப்புகளைக் கொண்டுள்ள இவ் இரண்டாவது தொகுதி 39 அடுக்குகளைக் கொண்டிருக்கும். உயரம் 136 மீற்றர்களாக அமைந்திருக்கும் என்பதுடன், நீச்சல் தடாகம், நவீன ஜிம்னாசியம், ஸ்டீம் மற்றும் சோனா அறைகள், மேடை மற்றும் நாட்டின் வணிக தலைநகரின் வனப்பை கண்டு களிக்கக்கூடிய வகையிலமையும் மொட்டை மாடி போன்றவற்றை கொண்டிருக்கும்.  

இந்த அறிமுகம் தொடர்பில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் புரொப்பர்டி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியும், நிறைவேற்று உப தலைவருமான ரொஷானி ஜயசுந்தர மொராயஸ் கருத்துத்தெரிவிக்கையில், ‘நாம் இரண்டாவது குடியிருப்பு தொகுதியான The Suites at Cinnamon Life’ ஐ அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இதில் 2 படுக்கையறைகளைக் கொண்ட 192 அலகுகளும், 4 பென்ட்ஹவுஸ் அலகுகளும் நிர்மாணிக்கப்படும். முதலாவது குடியிருப்புத் தொகுதியான ‘The Suites at Cinnamon Life’இன் அலகுகள் வெற்றிகரமாக விற்பனையாக ஆரம்பித்திருந்ததைத் தொடர்ந்து, 2ஆவது தொகுதியை அறிமுகம் செய்ய நாம் தீர்மானித்தோம். ‘The Suites’ க்கான முன்பதிவுகள் அதிகளவு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. சினமன் லைஃவ் தொகுதியில் ஒரு குடியிருப்பில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு சிறந்த பெறுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.’ என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X