2025 மே 19, திங்கட்கிழமை

UNICEF உடன் சுவதேஷி கொஹோம்ப பேபி கைகோர்ப்பு

Editorial   / 2020 மார்ச் 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவதேஷி கொஹோம்ப பேபி வர்த்தக நாமம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் (UNICEF) இணைந்து, இலங்கையின் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அவசியமான உதவிகளை வழங்குவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்காக எனும் BetterParenting.lk இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது. 

UNICEF ஆல் வடிவமைக்கப்பட்ட ஒன்லைன் கட்டமைப்பாக BetterParenting.lk அமைந்துள்ளதுடன், பெற்றோருக்கு தமது பிள்ளைகளுக்கு அவசியமானப் பராமரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான தகவலகள், குறிப்புகள், வழிகாட்டல்கள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும். இதில் குழந்தைப் பராமரிப்பு, சிறுவர் அபிவிருத்தி, உணவு, போஷாக்கு, சுகாதாரம் போன்றன அடங்கியுள்ளன. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிபுணர்களால் பதிவேற்றப்படும் ஆக்கங்கள், வீடியோக்கள்,  அனிமேஷன்கள் போன்றவற்றை ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி காணப்படும்.  

BetterParenting.lk க்கு அனுசரணை வழங்குவதற்கான நான்கு ஆண்டு கால உடன்படிக்கையில் சுவதேஷி கொஹோம்ப பேபி வர்த்தக நாமம் கைச்சாத்திட்டது. இந்தத் திட்டத்தினூடாக வழங்கப்படும் நிதி உதவியைக் கொண்டு, UNICEF இனால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆரம்ப சிறுவர் அபிவிருத்தி (ECD) செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்கப்படும். குறிப்பாக விழிப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் பெற்றோருக்கும் பராமரிப்போருக்கும் அவசியமான தகவல்களை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X