2025 மே 19, திங்கட்கிழமை

Viber உடன் காதலர் தினம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பைப் பகிரும் இம்மாதத்தில் அனைவருக்கும் இலகுவாக அன்பை பகிர்ந்து கொள்ள Viber வசதி ஏற்படுத்தியுள்ளது. Viber Cupid vDk chatbot ஐ இதற்காக விசேடமாக அறிமுகம் செய்துள்ளதுடன், அன்பை பகிர்ந்து கொள்ளும் சிறந்த வழியாக திகழச் செய்துள்ளது. 

ஒரு எளிமையான வினாவை உங்களிடம் கேட்ட வண்ணம் Viber Cupid செயற்பட ஆரம்பிக்கும். உங்களின் உறவு நிலை என்ன? தனிமையில், நிச்சயிக்கப்பட்டவர் அல்லது திருமணமானவர் என இந்தப் பதில்கள் அமைந்திருக்கும். நீங்கள் தெரிவு செய்த பதிலைப் பொறுத்து பெருமளவான களிப்பூட்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்.

நீங்கள் தனிமையில் இருப்பவராயின், காதல் தொடர்பான வினாக்கள் உங்களிடம் கேட்கப்பட்டு, உங்களுக்கு பொருத்தமான புகழ்பெற்ற நட்சத்திரம் பற்றி காண்பிக்கப்படும். இந்த வினாக்களில், உங்களின் கனவு காதலரை emoji ஊடாக விவரிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இந்த செயற்பாடு களிப்பூட்டுவதாகவும், மகிழ்ச்சியூட்டுவதாகவும் அமைந்திருக்கும்.

நீங்கள் ஏற்கனவே உறவில் உள்ளீர்களாயின், Viber ஊடாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வெலன்டைன் கார்ட் ஒன்றை அனுப்பும் வாய்ப்பு வழங்கப்படும். இறுதியாக, உங்களை எவரும் நேசிப்பதாக நீங்கள் நம்பினால், அந்த நபரிடமிருந்து உங்களுக்கு காதல் அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.

Viber Cupid க்கு மேலதிகமாக, Viber இடமிருந்து உங்கள் தகவல் பரிமாற்றத்தை மேலும் மகிழ்ச்சிகரமாக்குவதற்கு புதிய உள்ளம்சங்கள் அடக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த appஇல் இருதய வடிவிலான உடனடி வீடியோ தகவல் பகிர்வு மற்றும் மிதக்கும் இருதய வடிவம் போன்றன chat செய்யும் போது பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் காணப்படுகின்றன.

நீங்கள் எந்த உறவைக் கொண்டிருந்தாலும், அன்பைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மாதத்தில் சிறந்த உள்ளம்சங்களை Viber அறிமுகம் செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X