2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

World Down Syndrome Day நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

Hemas Outreach Foundation’இன் (HOF) World Down Syndrome Day நிகழ்வுகள், ‘Eka Se Salakamu’ (Treat All Alike) சமூக முன்னெடுப்பின் அங்கமாக அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது பட்டம் ஏற்றும் கொண்டாட்டமும் அடங்கியிருந்தது. அங்கவீனமுற்ற சிறுவர்களுக்கான AYATI தேசிய நிலையத்துடன் பணியாற்றி, Down syndrome தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் அந்த குறைபாட்டுடன் வாழும் சிறுவர்களுடன் பொழுதை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

HOF’இன் கொண்டாட்டத்தில், Trisomy 21 இலுள்ள மேலதிக குரோமோசோம்களை பிரதிபலிக்கும் வகையில் 100 பட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், விழிப்புணர்வூட்டல் மற்றும் ஏற்றுக் கொள்ளும் திறன் ஆகியவற்றில் சிறுவர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. Hemas Group க்கு, Downs syndrome உடன் வாழும் ஒவ்வொரு குழந்தையின் துணிச்சலையும் மகிழ்ச்சியையும் மகிழ்விக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நிலையைச் சுற்றியுள்ள தவறான கருத்துக்களை அவிழ்த்து அவற்றை மாற்றுவதற்கான ஒரு தனித்துவமான முக்கியமான வாய்ப்பாக இந்த கொண்டாட்டம் அமைந்திருந்தது.

நிகழ்வு பற்றி, Hemas Outreach Foundation மற்றும் Ayati Trust Sri Lanka இன் நிறைவேற்று பணிப்பாளர் ஷிரோமி மசகொரல கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வின் மூலம், குழந்தைகள் தங்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் கொண்டாடுவதை அனுபவிப்பது மட்டுமல்லாமல், இந்த குழந்தைகளின் தனித்துவமான தன்மையின் பிரகாசமான சான்றாக மக்கள் அதை அங்கீகரிப்பார்கள் என்பதும் எங்கள் நம்பிக்கை. இதுபோன்ற முயற்சிகள் எவ்வாறு உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் கரிசனை ஆகியவற்றை வளர்ப்பதற்கான சரியான திசையில் ஒரு படியாக அமையும் என்பதை நாங்கள் நிரூபிக்க விரும்புகிறோம். இந்த குழந்தைகள் எவ்வளவு திறமையானவர்கள் மற்றும் நிறைவானவர்கள் என்பதை அங்கீகரிக்க, சமூகத்தின் மற்ற பகுதிகள் ஒரே மாதிரியான கருத்துக்களிலிருந்து விடுபடுவது முக்கியம்.” என்றார்.

2021 ஆம் ஆண்டு Hemas Outreach Foundation இனால், இலங்கையின் முதலாவது அங்கவீனமுற்ற சிறுவர்களுக்கான தேசிய நிலையமான AYATI உடன் இணைந்து, சமூக செயற்பாடாக அமைந்துள்ள ‘Eka Se Salakamu’, அங்கவீனமுற்ற சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்பாக அமைந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கியதன் அவசியத்தையும், குறைபாடுகளை இழிவுபடுத்துவதையும் ஆழமாக உணர்ந்த இந்த இயக்கம், இன்றைய சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிக்கும் Down syndrome உடன் வாழும் குழந்தைகளின் மறைந்திருக்கும் திறன்களை வளர்க்கும் நாட்டின் மிகவும் முன்னோடி அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .