
செரண்டிப் மா ஆலைக்கு அண்மையில் நெதர்லாந்தின் கொன்ட்ரோல் யூனியன் இன்ஸ்பெக்ஷன்ஸ் (Control Union Inspections) மூலமாக ISO 9001:2008 தர முகாமைத்துவ முறைமைக்கான தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தரச்சான்றிதழ் மூலம் செரண்டிப் மா ஆலையின் உற்பத்திகளும் செயன்முறைகளும் சர்வதேச தரத்துக்கு அமைவாக உள்ளதுடன், அதன் செவன் ஸ்டார் மா உற்பத்திகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் முத்திரையைப் பதித்துள்ளது.
கொன்ட்ரோல் யூனியனின் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்ஜய பதிரகே (இடமிருந்து மூன்றாவது) தரச்சான்றிதழை செரண்டிப் மா ஆலையின் பிரதம நிதி அதிகாரியான மொஹம்மட் ரியாலிடம் கையளிப்பதைக் காணலாம். (இ – வ) கொன்ட்ரோல் யூனியனைச் சேர்ந்த சம்பத் வன்னிஆராச்சி மற்றும் சுபுன் ஜயசிங்க ஆகியோர் செரண்டிப் மா ஆலையின் அப்துல் காதர் மற்றும் திருமதி ஹேமானி குணதிலக ஆகியோருடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.
உணவுசார் நிறுவனங்களுக்கான தரத்தை உறுதிப்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட முகாமைத்துவ முறைமைகளை (IMS) பெற்றுக்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் செரண்டிப் மா ஆலையானது, எதிர்காலத்தில் முழுமையான IMS சான்றிதழ்களைப் பெற எதிர்பார்க்கின்றது.