2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

SLIIT கல்வி நிலையத்தின் பட்டமளிப்பு விழா

A.P.Mathan   / 2013 மார்ச் 21 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் SLIIT மாலபே பல்கலைக்கழக வளாகத்தில், இலங்கையில் முதற்தர கற்கைநெறிகளை வழங்கிவரும் SLIIT நிலையத்தில் தகவல் தொழில்நுட்பம், வர்த்தக நிர்வாகம், இலத்திரனியல் பொறியியல் போன்ற பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டத்தை பெற்ற 1144 மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஆறு அமர்வுகளாக நடைபெற்ற இப் பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினர்களாக  பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கர்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் பீடத் துணைவேந்தர் பேராசிரியர். Andris Stelbovics, நிதி செயலாளர் டாக்டர்.பீ.பி.ஜயசுந்தர, BOI இன் முன்னாள் தலைவரும், சபை அங்கத்தவருமான திலான் விஜேசிங்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஸெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் கலை, கணினி, பொறியியல் மற்றும் விஞ்ஞானம் போன்ற பிரிவுகளின் துணை வேந்தர் பேராசிரியர். Roger Eccleston ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் விழாவில் கருத்து தெரிவித்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், 'இலங்கை துரித வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இவ்வேளையில் வங்கியியல், நிதி, தகவல் தொடர்பாடல், பொழுதுபோக்கு, விமானத்துறை, இராணுவம் ஆகிய துறைகளுக்கு பங்களிப்பை வழங்கும் தகவல் தொழில்நுட்ப மாணவர்களின் பங்களிப்பினை அங்கீகரித்தல் வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மாணவர்களின் கைகளில் தங்கியுள்ளது. இலங்கையில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளை வழங்கிவரும் நிறுவனமாக SLIIT திகழ்கிறது. இப் பட்டதாரிகளுக்கும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கிவரும் SLIIT நிலையத்திற்கும் பாராட்;டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.

இவ் விழாவில் கருத்து தெரிவித்த டாக்டர்.பீ.பி.ஜயசுந்தர, 'இத் துறையானது பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்போது இலங்கையானது நடுத்தர வருவாயைப் பெறும் நாடாக உள்ளது. இனிமேல் பட்டதாரிகள் எனும் வலுவான சங்கிலியுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது' என்றார். மேலும் பட்டதாரிகள் மத்தியில் பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட திலான் விஜேசிங்க, 'SLIIT கல்வி நிலையத்தினதும், எதிர்காலத்தில் இத் தேசத்தின் உற்பத்தி குடிமகன்களாக பங்களிப்பை வழங்கவுள்ள இப் பட்டதாரிகளுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்' என்றார்.

SLIIT மற்றும் ஸெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான நீண்டகால பங்காண்மை குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் Roger Eccleston, 'இலங்கையின் கல்வியின் தரம், அவசியம் காரணமாக சர்வதேச கல்வி மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது' என தெரிவித்தார்.

'நமது அன்றாட வேலை, பொழுதுபோக்குகள் மற்றும் விளையாட்டுகளின் போது சந்தேகத்துக்கிடமின்றி தகவல் மற்றும் கனணி தொழில்நுட்பம் போன்றன முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது' என கர்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் பீட துணை வேந்தர் பேராசிரியர்.அன்ரிஸ் ஸ்டெல்பொவிக்ஸ் தெரிவித்தார். '21 ஆம் நூற்றாண்டில் ICT பட்டதாரிகளுக்கான கேள்வி அதிகரிக்கவுள்ள அதேவேளை, உங்கள் தொழிற்துறை எதை நோக்கி வழிகாட்டுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்பதே எனது அறிவுரையாகும்' என்றார்.

SLIIT நிலையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'நாம் எமது மாணவர்களின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைவதுடன், வகுப்பறை, வேலைச்சூழல் போன்ற போட்டிகர உலகத்தில் தங்கள் திறனை வெளிக்காட்டியது குறித்து பெருமையடைகிறோம். அவர்களின் எதிர்கால முயற்சிகள் யாவும் சிறப்பாக அமைய நாம் வாழ்த்துகிறோம்' என்றார்.

'நவீன உலகத்துடன் இணையவுள்ள இப் பட்டதாரிகளின் அனைத்து முயற்சியும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்' என SLIIT நிலையத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார். இப் பட்டமளிப்பு விழாவில் SLIIT நிலையத்தின் நீண்டகால கல்வி பங்காளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருது அனுசரணையை IFS, Virtusa, மெட்ரோபொலிடன் கம்பியூட்டர்ஸ் பிரைவட் லிமிடெட், EPIC லங்கா குரூப் மற்றும் Zone 24 x 7 Pvt Ltd போன்றன வழங்கியிருந்தன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .