2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அகர்வுட்டுக்குஉயர் இலாபத்தை வழங்கும் சதாஹரித

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒரு தசாப்தமாக அகர்வுட் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கும்  முதலீட்டாளருக்கும் அனுகூலங்களை வழங்கக்கூடிய வகையிலான பாதுகாப்பான வணிக நோக்கிலான வனவியல் முதலீடுகளை வழங்கி வருகிறது.

நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது தொடர்பான புரிதலை கொண்டுள்ள சதாஹரித பிளாண்டேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எமது மக்களுக்கும், உள்நாட்டு பொருளாதாரத்துக்கும்  நன்மையளிக்கக்கூடிய ஏதேனுமொன்றை ஆரம்பிப்பதற்கும், நம்பிக்கையான மற்றும் நிச்சயமாக அனுகூலமிக்க சகாயமான உற்பத்தியை வழங்குவதற்குமான ஆர்வம் என்னிடம் காணப்பட்டது' என்றார்.

அகர்வுட்டின் கவர்ச்சிகரமான பண்புகள் குறித்து நவரத்ன மேலும் தெரிவித்ததாவது, 'மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை இது அவர்களின் கலாசாரத்தின் ஒரு பகுதி. பெரும்பான்மையாக செல்வம் மற்றும் அந்தஸ்தை வெளிப்படுத்தும் அளவுகோலாகவும் வீடுகளில் வாசனைத்திரவியமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வளர்ந்துவரும் அழகுசாதன துறை காரணமாக, உலகின் தலைசிறந்த வர்த்தகநாமங்கள் தமக்கான உற்பத்திகளில் பிரத்தியேகமான நறுமணத்தை உருவாக்குவதற்கான பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் இம்மரத்திற்கு அதியுயர் கேள்வி நிலவுகிறது' என்றார்.  

மேலும் இம்மரங்கள் சவர்க்காரங்கள், சமய நிகழ்வுகளுக்கான ஊதுபத்திகள் உற்பத்திகளில் பயன்படுத்தப்படுவதுடன், பெரும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் உற்பத்தியாக நம்பப்பட்டு வருவதால் இதில் ஆபரணங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

'அகர்வுட்டின் வலுவான சந்தை பெறுமதி குறித்து வலியுறுத்திய நவரத்ன, 'மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான அகர்வுட்டினை வருடந்தோறும் சிங்கப்பூர் ஏற்றுமதி செய்து வருகிறது. உலகம் முழுவதும் 12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட துறையாக அகர்வுட் விளங்குகிறது' என நவரத்ன குறிப்பிட்டார்.

அறுவடைக்காக வெறும் 40,000 ரூபாய் மாத்திரமே செலவு செய்து ஒரு மரத்திலிருந்து சுமார் 100,000 ரூபாய் வரையான இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என்பதை எமது ஆராய்ச்சிகள் ஊடாக நாம் கண்டறிந்துள்ளோம். எனினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நாம் வழங்கும் குறைந்தபட்ச மீள்பெறல் ஏனைய வங்கிகளை காட்டிலும் அதிகமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X