2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அங்கர் திரவப் பால் அறிமுகம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பாற்பண்ணையாளர்களால் பெறப்படும் பாலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட அங்கர் திரவப் பால் நாடாளவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய அங்கர் திரவப் பாலானது ஒரு லீற்றர் யு‌எச்‌டி பக்கற்களில் சந்தையில் கிடைக்கிறது. மேற்படி பால்பக்கற்றை குளிரூட்டியில் வைத்திருக்காமல் சேமிக்க முடியும் என்பதுடன், நான்கு மாதங்கள் வரை திறக்காதந நிலையில் சேமித்து வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கர் நிறுவனத்தின் இந்தப் புதிய தயாரிப்பு கம்பகாவில் அமைந்துள்ள பால் கொள்முதல் செய்யும், குளிர வைக்கும் நிலையத்தில், இந்த நிலையத்துக்கு பாலை விநியோகிக்கும் பாற்பண்ணையார்கள் மேற்படி அங்கர் திரவப்பாலை அறிமுகப்படுத்தியிருந்தனர்.

இந்த வெளியீட்டின் போது உரையாற்றிய, பொன்டெரா தயாரிப்புக்களுக்கான இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் லியோன் கிளமெண்ட், இலங்கையில் விரும்பத்தகும் பாலுற்பத்தி நாமமானதும், 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கு உயர் ரக பாற் போஷாக்கை வழங்கி வரும் அங்கருக்கு இது ஒரு புதியயதொரு மைற்கல் எனத் தெரிவித்தார்.

இலங்கையின் உயர்ந்து வரும் பாலுற்பத்தி பொருட்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக அங்கரின் புதிய திரவப் பால் விளங்கும் எனத் தெரிவித்தார்.

தவிர, இவ்வருட தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பகா பால் சேகரிப்பு நிலையத்துக்கு பால் வளங்கி வரும் நிஷாந்த என்பவர் கருத்து தெரிவிக்கையில், தனது பாற்பண்ணையை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் ஆலோசனையை பொன்டெரா நிறுவனத்தின் வல்லுனர்கள் தனக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

இது தவிர ஏற்கனவே பல்வேறு திரவப்பால்கள் சந்தையிலுள்ள நிலையில், எவ்வாறு புதிய அங்கர் திரவப் பால் சந்தையில் போட்டிகளை எதிர்கொள்ளப்போகின்றது என்று வினவப்பட்டதுக்கு, இலங்கையில் அங்கர் எனும் வியாபார நாமம் கொண்டுள்ள தாக்கத்தின் காரணமாக, சந்தையில் இந்தப் புதிய உற்பத்தி செல்வதில் நெருக்கடியில்லை என பொன்டெரா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ரொஷான் டி சில்வா தெரிவித்தார்.

1886ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உருவாக்கப்பட்ட பொன்டெராவின் பாலுற்பத்தி பொருட்கள் 70 வரையான நாடுகளில் விற்பனையாகின்றன.  இலங்கையில் 1996ஆம் ஆண்டு அறிமுகமாகி 200 பால் கொள்வனவாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 1000 வரையான உள்ளூர் கொள்வனவாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது இலங்கைக்கு தேவையான பாலின் 30 சதவீதமானது உள்ளூரிலிருந்து பெறப்படுகிறது. தற்போது வருடாந்தம் 8 மில்லியன் லீற்றர் பால் கொள்வனவு செய்யப்படுகிறது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X