2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அனிமேஷன் கண்காட்சி

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

Animate Her எனும் தொனிப்பொருளில் பெண்களின் வாழ்க்கை, பணி தொடர்பான சிறந்த உள்ளம்சங்களை அனிமேஷன் முறையில் காண்பிக்கும் கண்காட்சி, மார்ச் 14, 15ஆம் திகதிகளில், கொழும்பு 07, கில்பர்ட் கிரெசன்ட், ஹரொல்ட் பீரிஸ் கலரியில் முற்பகல்  10 மணி முதல் பிற்பகல் 8 மணி வரை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

“பிரிட்டிஷ் கவுன்சில் ஹீரோயின்களை உருவாக்கல்” எனும் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்துக்கு நிதியளிக்கப்படுகின்றது.  

இந்தக் கண்காட்சியில் மூன்று குறுந்திரைப்படங்கள் காண்பிக்கப்படும் என்பதுடன், கடல்வாழ் உயிரியல் ஆர்வலர் ஆஷா டி வொஸ் அவர்களைச் சித்தரிப்பதாக அமைந்திருக்கும். 

இந்தத் தொடரைத் தயாரித்தவர், இருஷி தென்னகோன். இவர், கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் அனிமேஷன் நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்தக் கண்காட்சிக்கான அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X