Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வட்டிசாராத முன்னணி வங்கியாக திகழும் அமானா வங்கி, முதலாம் காலாண்டில் 23.1 மில்லியன் மற்றும் 2ம் காலாண்டில் 47.5 மில்லியன் இலாபத்தினை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து 3ம் காலாண்டில் 50.6 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 2015 செப்டம்பர் 30ம் திகதியுடன் நிறைவுபெற்ற 9 மாதங்களுக்கான பெறுமதிசேர் வரிக்கு முந்திய செயற்பாட்டு இலாபம் 225.2 மில்லியன் ரூபாவாகும்.
வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வினைத்திறனான செலவு முகாமைத்துவத்திற்கு மத்தியில் 2015ம் ஆண்டின் முதல் 09 மாத காலப் பகுதியில் 121.2 மில்லியன் ரூபா இலாபத்தை பெற்றிருப்பதானது 2014ம் ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது 171.8 சதவீத வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது. அதாவது கடந்த வருடம் பதிவாகியிருந்த 168.7 மில்லியன் ரூபா நஷ;டத்திற்கு பதிலாக இந்த வருடம் 290 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வங்கியின் மொத்த வருமானத்தின் வளர்ச்சியில் நிதியளிப்பு மூலமான வருமானம் 2.0 பில்லியன் ரூபாவாகும். தேரிய இயக்க வருமானம் 31.8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து 1.4 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
மொத்த சொத்து பெறுமானமாக 34.9 பில்லியன் ரூபாவுடன் இந்த வருடத்தை ஆரம்பித்த அமானா வங்கியின் கடந்த 09 மாத காலப் பகுதியில் 24.5 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து 43.4 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் நிதியுதவித்தொகை 30.2 பில்லியன் ரூபாவாகவும், வாடிக்கையாளர் வைப்புகள் 34.8 பில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. வங்கி தொடர்ந்தும் ஒரு குறைந்த மட்டத்திலான மீளச் செலுத்தாத கடன் விகிதத்தை பேணி வருகின்றது. 1.21 சதவீதமாக காணப்படும் இந்த விகிதமானது துறைசார் சராசரிக்கு கீழாகவே உள்ளது. இது வங்கியின் செயற்திறனான கடன் இடர் முகாமைத்துவக் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் ஊடாக முதலீடுகளின் தரத்தை எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாவது காலாண்டின் நிறைவில் தேரிய மீளச் செலுத்தாத கடன் விகிதம் 0.52 சதவீதமாகும்.
வங்கியின் இதுவரையான செயலாற்றுகை பற்றி கருத்து வெளியிட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' 2014ம் ஆண்டின் 4வது காலாண்டிலிருந்து ஆரம்பித்து தொடராக நான்கு காலாண்டுகளில் எமது வங்கி இலாபம் அடைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்பார்த்ததையும் விட கூடுதலான இலாபத்தை அடைவதற்கான காரணம் வங்கியின் பிரத்தியேக முறையும், வங்கிக்கு கிடைத்துள்ள பரவலான அங்கீகாரமுமாகும். செலவு முகாமைத்துவம் மற்றும் சேவைத் திறமையில் வங்கி காட்டிவரும் ஆர்வமும் இதற்கு துணைபுரிந்துள்ளது. தற்போது அடையப்பெற்றுள்ள வளர்ச்சியானது வங்கியின் 5 வருட மூலோபாய திட்டதிற்கு அமைவாக, சிறிய, மற்றும் நடுத்தர தொழில்முயற்சி வங்கியாக இருந்து கொண்டு நாம் செயற்பட்டு வருவதை பிரதிபலிக்கின்றது' எனக் குறிப்பிட்டார்.
வட்டிசாராத இஸ்லாமிய வங்கியியல் துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் முதலாவது உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட பிட்ச் தரவரிசைக்கு (Fitch Rating) அமைய BB(lka) திடகாத்தரமான நிலையில் வங்கியின் நீண்டகால தேசிய தரப்படுத்தலை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக 2014ம் ஆண்டில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது.
தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago