2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல் தர பாதுகாப்பான மின்சார மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்கள் உற்பத்தி நிறுவனமான, களனி கேபிள்ஸ், ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதைத் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தனதாக்கியுள்ளது.

 ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் ஏழாவது தடவையாக சிங்கப்பபூர் பான் பசுபிக் ஹோட்டலில் நடைபெற்றது.

வருடாந்தம் இடம்பெறும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை,Employer Brands Institute kw;Wk; CHRD Asia மற்றும் World HRD உடன் இணைந்து றுழசடன ர்சுனு ஊழபெசநளள கொள்கைப் பங்காளராக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் என்பது வியாபாரத்துக்கான ஆசிய சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருது அதிகளவு கௌரவிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், ஆசியாவின் பொருளாதாரத்தை உறுதியடையச் செய்யும் நிறுவனங்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

ஆசியாவின் வௌ;வேறு பகுதிகளைச் சேர்ந்த சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணர்கள் இந்த விருதுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதில் நடுநிலை வகிப்பதுடன், இந்த தெரிவின் போது கடுமையான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான தகைமையைப் பெற்றுக் கொள்வது என்பது இரு கட்டமாக அமைந்துள்ளன. ஆசிய நாடொன்றைச் சேர்ந்த நிறுவனம் இந்த விருதுக்காக தனித்து விண்ணப்பிக்க முடியும் அல்லது சுயாதீனமான நடுவர்கள் குறித்த நிறுவனத்தின் அறிமுக ஆவணத்தை மீளாய்வு செய்து விருதை வழங்குவதற்காக பரிந்துரைக்கலாம்.

கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டின் வெற்றியாளராக களனி கேபிள்ஸ் தெரிவு செய்யப்பட்டமை, சுயாதீன நடுவர்கள் நிறுவனத்தின் அறிமுக ஆவணத்தை மீளாய்வு செய்து விருதுக்காகப் பரிந்துரை செய்திருந்ததன் மூலமாகும். களனி கேபிள்ஸ் பிஎல்சி பற்றி அவர்கள் பக்கச்சார்பற்ற முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததுடன், 2016 ஆம் ஆண்டுக்குரிய வெற்றியாளராகவும் தெரிவு செய்திருந்தனர்.

வெற்றியாளர் தெரிவின் போது, புத்தாக்கத்துக்கு ஊக்குவிக்கும் கம்பனியின் கலாசாரம், மனித வளங்கள் கொள்கைகளைப் பேணுவதுடன், நிறுவனசார் சுகாதார மற்றும் பெறுமதிகளில் தொடர்ச்சியான மேம்பாடு, சமூக தொழில் வழங்குநர் மற்றும் எதிர்கால தலைவர்களை ஊக்குவிப்பதுக்கானத் திறன் போன்றன கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிறுவனங்கள் தொடர்பான பிரதான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

களனி கேபிள்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமம் 2016 விருதை 300க்கும் அதிகமான சிரேஷ்ட நபர்கள் முன்னிலையில் 150 க்கும் அதிகமான ஆசிய நிறுவனங்கள் மத்தியில் பெற்றுக் கொண்டார். களனி கேபிள்ஸ் பிஎல்சியின் மனித வளங்கள் முகாமையாளர் கிஹான் விதானகமகே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X