2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆயுட் காப்புறுதி விழிப்புணர்வு மாதம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுட் காப்புறுதியின் பெறுமானம் சம்பந்தமான ஆயுட் காப்புறுதியின் பெறுமானம் சம்பந்தமான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், இலங்கை காப்புறுதிச் சபையுடன் இணைந்து (IBSL), இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL), தொடர்ந்தும் இரண்டாவது வருடமாக “ஆயுட் காப்புறுதி விழிப்புணர்வு” மாதத்தை பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், 2016 செப்டெம்பர் மாதம் முழுவதும், ஆயுட் காப்புறுதி விழிப்புணர்வு மாதமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  

 ஆயுட் காப்புறுதிச் சந்தை நடவடிக்கைகள், மிகவும் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. மொத்த ஆயுட் காப்புறுதிக் கட்டுப்பணத்துக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம், 2015ஆம் ஆண்டில், 0.48 சதவீதமாக இருந்தது (மூலம்: 2015 IBSL ஆண்டறிக்கை). கிடைக்கப்பெற்ற தரவு விவரங்களின் அடிப்படையில், இலங்கையில் தொழில் செய்வோரின் மொத்த எண்ணிக்கையில் 35 சமவீதமானோர (மொத்த சனத்தொகையில் 13%), ஆயுட் காப்புறுதி என்ற வரப்பிரசாதத்தைப் பெற்றுள்ளனர். எனவே, ஆயுட் காப்புறுதி விழிப்புணர்ச்சி நடவடிக்கையின் முக்கிய நோக்கம், நாட்டின் ஆயுட் காப்புறுதி செய்து கொள்வோரின் எண்ணிக்கையயை அதிகரிப்பதாகும்.  

2016 செப்டம்பரில் இடம்பெறவிருக்கும் பிரசார நடவடிக்கைகள் மூலம் முந்திய வருடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உந்துசக்தி மேலும் வலுத்தப்படும் என்றும் நாட்டின் சகல பகுதிகளிலும் காப்புறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு பெரிதும் உதவும் என்றும் தொழிற்றுறை நிபுணர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.  
மிக முக்கியமான பிரசார நடவடிக்கைகள், அனைத்துக் காப்புறுதியாளர்களினாலும் நாட்டின் சகல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் காரணமாக, 2016 செப்டெம்பர் 01 - 30 வரை மேற்கொள்ளப்படும். காப்புறுதியின் பெறுமானம் அதிகரிக்கப்பட இருக்கிறது. உத்தேச வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கென இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் இலங்கை காப்புறுதிச் சபை என்பன பல்வேறு தொடர்பாடல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளன.   

வானொலி, அச்சு ஊடக, டிஜிடல், சமூக வலைத்தளங்கள் ஊடான பிரசார நடவடிக்கைகள் என்பனவும், இதில் அடங்கும். முந்திய வருடங்களில் இடம்பெற்றது போல, விற்பனை ஆலோசகர்களுக்கும் விற்பனை அதிகாரிகளுக்கும் இடையில், போட்டி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆயுட் காப்புறுதி விழிப்புணர்ச்சி மாதம் முடிவடைந்ததும் இடம்பெறவிருக்கும் விசேட நிகழ்ச்சியின் போது முதலிடம் பெறுவோர், பரிசு பெறுவதுடன் அங்கிகாரமும் பெறவிருக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X