2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 பில்லியன் போனஸ் கொடுப்பனவு - ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ்

J.A. George   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு மாபெரும் ரூ. 10 பில்லியன் போனஸ் கொடுப்பனவு அறிவிப்பை வெளியிட்டு ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

  • காப்புறுதித் துறை வரலாற்றில் முதன்முறையாக ஆயுள் காப்புறுதி போனஸ் கொடுப்பனவாக ரூ. 10 பில். தொகையை தாண்டியுள்ளது
  • 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட திரண்ட ரூ. 92.8 பில். பெறுமதி என்பதில் அதியுயர் ஆயுள் காப்புறுதி போனஸ் கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது

தேசத்தின் காப்புறுதியாளரான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் (SLIC), தனது காப்புறுதிதாரர்களுக்கு துறையின் மாபெரும் போனஸ் கொடுப்பனவுத் தொகையான ரூ. 10.4 பில்லியனை 2022 ஆம் ஆண்டுக்காக பிரகடனம் செய்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆயுள் காப்புறுதி போனஸ் கொடுப்பனவாக ரூ. 92.8 பில்லியன் எனும் உயர்ந்த தொகையை வழங்கியுள்ளது.

நாட்டின் மாபெரும் ஆயுள் காப்புறுதி போனஸ் கொடுப்பனவு தொகையை பிரகடனம் செய்துள்ளதனூடாக, இலங்கையின் உறுதியான காப்புறுதி சேவைகள் வழங்குநர் எனும் காப்புறுதிதாரர்களின் நம்பிக்கையை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் மேலும் உறுதி செய்துள்ளது. சவால்கள் நிறைந்த சந்தைச் சூழ்நிலை நிலவிய போதிலும், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் தனது சொத்துகள் இருப்பை ரூ. 274.4 பில்லியனாகவும், ஆயுள் நிதியத்தை ரூ. 156.7 பில்லியனாகவும் உயர்த்தியிருந்தது. இதனூடாக மாபெரும் மற்றும் வலிமையான உள்நாட்டு காப்புறுதி சேவை வழங்குநர் எனும் தனது நிலையை மேலும் வலிமைப்படுத்தியிருந்தது.

நிறுவனத்தின் முறையான முதலீட்டு நிர்வாக மூலோபாயங்கள் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களின் நலன் தொடர்பில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டிலுள்ள காப்புறுதி வழங்குநர் நிதி உறுதிப்பாட்டுக்காக A(lka) ஃபிட்ச் தரப்படுத்தல் மூலமாக உறுதி செய்யப்பட்ட ஒரே காப்புறுதி வழங்குநராகவும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் திகழ்கின்றது.

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடு என்பது ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் பிரதான மூலோபாய அங்கங்களில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், புதிய சந்தைப் பிரிவுகளை இனங்காணல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு சகாயமான மற்றும் பொருத்தமான தீர்வுகளை வடிவமைத்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது. கடந்த ஆண்டு ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் அறிமுகம் செய்திருந்த பிரத்தியேகமான காப்புறுதித் திட்டங்களில் ஒன்றாக, ‘School Fee Protector’ அமைந்திருந்தது.

எதிர்பாராதவிதமாக குடும்பத்தின் பிரதான வருமானமீட்டுபவர் உயிரிழந்தால் அல்லது நிரந்தர அங்கவீனமுற்றால், சிறுவர்களின் கல்விசார் செலவீனங்களை பராமரிக்கும் வகையில் அமைந்துள்ளது. தீர்வுகள் மற்றும் செயன்முறை புத்தாக்கங்களில் ஈடுபடுவதற்கு மேலதிகமாக, தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு பெறுமதி சேர்ப்புகள் தொடர்பிலும் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது.

இடம் – ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, தலைவர்  – ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ், வலம் – சந்தன எல். அளுத்கம, பிரதம நிறைவேற்று அதிகாரி - ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ்

இதன் பெறுபேறாக, 2022 ஆம் ஆண்டில், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைப் லோயல்டி வெகுமதித் (Life Loyalty Rewards) திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக, ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு பெருமளவு சலுகைகள் மற்றும் அனுகூலங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், காப்புறுதி தவணை காலப்பகுதி முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு உயர் பெறுமதியை அனுபவிப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டில், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தினால் மாதாந்தம் சராசரியாக ரூ. 960 மில்லியன் ஆயுள் காப்புறுதி உரிமை கோரல் கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டிருந்தது. அதனூடாக காப்புறுதிதாரர்களுக்கான அதன் உறுதிமொழிறை நிறைவேற்றுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலும், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது முதல், இலங்கை மக்களுக்கு ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வூட்டுவதற்கு அதிகளவு முக்கியத்துவமளிக்கின்றது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆயுள் காப்புறுதியை பிரபல்யப்படுத்துவதில் தேசிய காப்புறுதி சேவைகள் வழங்குநர் எனும் வகையில் முன்னிலையில் திகழ்கின்றது.

நாட்டிலுள்ள முன்னணி காப்புறுதிதாரர் எனும் வகையில், நாட்டினுள் காப்புறுதி கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக தொழில்நுட்பத்தை பின்பற்றுவது என்பதில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர் சேவை அனுபவம் மற்றும் சௌகரியத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், டிஜிட்டல் ஆற்றல்களை மேலும் வலுப்படுத்தி பெறுமதி சேர்க்கும் வகையில் தனது காப்புறுதித் தீர்வுகள் மற்றும் செயன்முறைகளை டிஜிட்டல் ஒருங்கிணைப்பு செய்யும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது.

உதாரணமாக, கடந்த ஆண்டு சகல போனஸ் கொடுப்பனவு சான்றிதழ்களும் டிஜிட்டல் தளங்களான SMS, மின்னஞ்சல் மற்றும் SLIC Mobile App ஆகியவற்றினூடாக விநியோகிக்கப்பட்டிருந்தது. மேலும், தற்கால கேள்விகளை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ், மேலதிக கொடுப்பனவு கேட்வேகள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், 0% வட்டியில்லாத இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள், எளிமைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக ஒழுங்கமைக்கப்பட்ட காப்புறுதி வழங்கல் மற்றும் உரிமை கோரல்கள் செலுத்தல்கள் போன்றவற்றையும் மேற்கொண்டிருந்தது.

வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தி இயங்குவதில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் Brand Finance இனால் “அதிகளவு விரும்பப்படும் காப்புறுதி வர்த்தக நாமம்” எனும் கௌரவிப்பு ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ்க்கு வழங்கப்பட்டிருந்தது. நாட்டு மக்கள் மத்தியில் ஒரு வர்த்தக நாமமாக ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், சந்தையில் கொண்டுள்ள உறுதியான பிரசன்னம் மற்றும் நாட்டு மக்களின் மீது அதிகளவு அக்கறை கொள்ளக்கூடிய வர்த்தக நாமத்தின் ஆற்றல் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன.

2023 Brand Finance இன் சிறந்த 100 “மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள்” எனும் வரிசையில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் தொடர்ந்தும் தரப்படுத்தப்பட்டிருந்தது. ரூ. 2.7 பில்லியன் வர்த்தக நாம பெறுமதியுடன், “மிகவும் பெறுமதி வாய்ந்த ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம்” என்பதில் இரண்டாமிடத்தை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் பெற்றுக் கொண்டது. மேலும், 2023 இல் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஆயுள் வர்த்தக நாமம் என்பது Brand Finance இனால் வெளியிடப்பட்ட ‘Movers and Shakers – மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமங்கள்” மற்றும் நாட்டிலுள்ள மாபெரும் விற்பனைசார் வர்த்தக நாமங்களுடன் போட்டியிட்டு, இரு ஸ்தானங்கள் முன்னேறி, 34 ஆவது அதிகளவு பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமமாக தரப்படுத்தப்பட்டிருந்தது. 

சமூகத்தாருக்கு, பிரிவுகளுக்கு வயதுக் குழுக்களுக்கு மற்றும் மாறுபட்ட இணைந்த குழுக்களுக்கு தனது தீர்வுகள் மற்றும் சந்தை முன்னேற்ற செயற்பாடுகளினூடாகவும், நடைமுறைச் சாத்தியமான மற்றும் சகாயமான காப்புறுதித் தீர்வுகளினூடாகவும் பாதுகாப்பளிப்பது தொடர்பான வழிமுறைகளை தொடர்ந்தும் இனங்காணும் நடவடிக்கைகளில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஈடுபட்டுள்ளது. 190 கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் எனும் பரந்த மற்றும் வலிமையான வலையமைப்புடன், 8000 க்கும் அதிகமான ஆலோசகர் வலையமைப்பினூடாக, தேசத்தின் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் காப்புறுதிக் கடப்பாட்டுக்கு அப்பால் சென்று சேவைகள் வழங்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .