Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 11 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் ஏழு வார காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீள ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.
2020 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகள் தொடர்பான விதிமுறைகளின் பிரகாரம், S&P SL 20 சுட்டி 196.93 புள்ளிகளால் அல்லது 10.11% இனால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினத்துக்கு மூடப்பட்டது.
இன்றைய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் புரள்வு பெறுமதி ரூ. 24 மில்லியனாக பதிவாகியிருந்தது.
சந்தை செயற்பாடுகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட போது அபவிசு 179.20 புள்ளிகளால் சரிவடைந்து 4392.43 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டி 196.93 புள்ளிகளால் சரிவடைந்து 1750.49 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்குசட்டம் இலங்கையில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை செயற்பாடுகளும் ஏழு வார காலமாக இடம்பெறவில்லை. பிராந்தியத்தில் காணப்படும் பங்குப்பரிவர்த்தனைகளில் மிக நீண்ட காலம் இயங்காமலிருந்த பங்குப்பரிவர்த்தனையாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கருதப்படுகின்றது.
பல நாடுகளில் முடக்க நிலை அல்லது ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த போதிலும், அந்நாடுகளின் பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago