2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆலோசனைகளை வழங்கும் Ikman.lk

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிகப் பெரிய இணையத்தள விற்பனை தளமான Ikman.lk இல் மாதாந்தம் பல்வேறு வகைப்படுத்தல்களின் கீழ் சுமார் 250,000 நானாவித விற்பனை விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. கணிசமான இந்த விளம்பரங்கள் காரணமாக, தரமான விளம்பரம் ஒன்றைப் பிரசுரிப்பதன் மூலம் எவ்வாறு சிறந்த பெறுபேற்றை அடையலாம் என்ற சில உள்ளகத் தகவல்களை ikman.lk பகிர்ந்து கொள்கின்றது.

பொதுவாகவே, ikman.lk விளம்பரம் ஒன்றைப் பிரசுரிப்பதானது, அந்தப் பொருளை துரிதமாக விற்பனை செய்ய வழிவகுப்பதாகும். விற்பனையாளர்கள் இணையத்தளத்துக்குள் பிரவேசித்து 'post your ad' என்ற பொத்தானை அழுத்தி, அதன் பின்னர் வழங்கப்படும் அறிவுறுத்தலைப் பின்பற்றினாலேயே போதுமானதாகும். ஏற்கனவே வாடிக்கையாளராக உள்ள ஒருவர், தனது கணக்கினுள் பிரவேசித்தால், அவர்கள் பற்றிய பொதுவான விவரங்கள் தானாகவே பதிவாகிவிடும். விளம்பரத்தை ikman.lk பரிசீலித்ததும், ஒரு மணி நேரத்துக்குள் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டமைக்கான உறுதி செய்யப்பட்ட ஒரு மின் அஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.

விரைவான பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில், தாக்கம் மிக்க விளம்பரம் ஒன்றை எவ்வாறு பிரசுரிப்பது, சரியான விலையைத் தெரிவு செய்வது, சிறந்த புகைப் படங்களைப் பயன்படுத்துவது, தெளிவான விளக்கத்தை அளிப்பது என்பன பற்றிய தகவல்களை ikman.lk பகிர்ந்து கொள்ளும்.

ஒரு பொருளுக்கு சரியான விலையைத் தெரிவு செய்யும் போது, ikman.lk அதனை ஒத்த விளம்பரங்களை ஆராய்ந்து, போட்டித் தன்மை கொண்ட விலைகளைத் தெரிவு செய்ய ikman.lk உற்சாகமூட்டும். இந்தச் செயற்பாட்டின் போது, இவ்வாறானதோர் பொருளுக்கு கொள்வனவாளர் எந்த விலையை வழங்கத் தயாராக இருப்பார் என்பதிலும் கவனம் செலுத்தப்படும். பொருளின் கேள்விக்கு ஏற்ப போட்டித்தன்மை கொண்ட விலையை நிர்ணயிப்பதால், பொருளை விரைவாக விற்பனை செய்ய முடியும்.

'ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமனானது' என்பது ஒரு பழமொழி. இணையம் ஒன்றில் விளம்பரம் ஒன்றைப் பிரசுரிக்கும் போது இது மிகவும் பொருத்தமானதாகின்றது. மிகச் சிறந்த புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்கள் விரைவில் விற்பனையாவதாக ikman.lk நடத்திய ஆய்வுகளின் மூலமும் தெரியவந்துள்ளது. விற்பனைக்குரிய பொருளின் அசல் படத்தை விளம்பரமாகப் பதிவு செய்கின்றபோது, அந்தப் பொருள் மாதிரி படங்கள் விளம்பரமாக இடப்படும் பொருள்களை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் விற்பனையாகின்றன. எனவே, விளம்பரங்களில் படங்களைப் பிரசுரிக்கும் போது, தெளிவான காட்சி கொண்ட புகைப்படங்களைப் பிரசுரிக்குமாறு ikman.lk ஆலோசனை வழங்குகின்றது. அத்தோடு, அந்தப் பொருளின் சகல கோணங்களையும் உள்ளடக்கியதாகவும் படம் அமைய வேண்டும். பொருளுக்குரிய படத்தில் வேறு அவசியமற்ற விடயங்கள் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொள்வதோடு, போதிய ஒளி அமைப்புடன் கூடியதாகவும் படங்கள் அமைய வேண்டும்.

விளம்பரங்களைப் பிரசுரிக்கின்றபோது, அவற்றுக்குப் போதிய விளக்கங்கள் இருக்க வேண்டும் என்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு ikman.lk ஆலோசனை வழங்குகின்றது. விரிவான விளக்கம் கொண்ட விளம்பரங்களைப் பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதையும், தெளிவான, நேர்மையான விளக்கங்கள் கொண்ட பொருள்கள் துரிதமாக விற்பனையாவதையும் கூட ஆய்வுகள் நிரூபித்துள்ளன. விளம்பரங்களை இடுகின்ற போது, பொருள் தொடர்பான முக்கிய வாசகங்கள் மற்றும் வாடிக்கையாளருக்குத் தேவையான தகவல்கள் என்பன நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். பிரசுரமாகும் பகுதி முழுமையாக நிரம்பியிருத்தலும் அவசியமாகும்.

விளம்பரம் ஒன்றை இணையத்தில் பிரசுரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல வழிகாட்டுதல்களை ikman.lk வழங்கியுள்ளது. அது தொடர்பான விதிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. விளம்பரங்களைப் பிரசுரிக்க முன்பதாக, இவற்றில் போதிய கவனம் செலுத்தி பின்பற்றுமாறு ikman.lk கேட்டுக் கொள்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X