2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இரு தங்க விருதுகளை தனதாக்கியிருந்த ஹல்பே டீ

A.P.Mathan   / 2015 நவம்பர் 07 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற 23ஆவது வருடாந்த தேசிய ஏற்றுமதியாளர் விருதுகள் 2015 இல், U.H.E குரூப் (பிரைவட்) லிமிட்டெட்டின் துணை நிறுவனமான ஹல்பே டீ இரு தங்க விருதுகளை தனதாக்கியிருந்தது.  

1992 ஆம் ஆண்டு முதல், தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் மூலமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய ஏற்றுமதி விருதுகள், இலங்கையில் வழங்கப்படும் சிறந்த விருதுகளாக அமைந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த இலங்கையின் ஏற்றுமதியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி, சர்வதேச வியாபாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி. ஹர்ஷ டி சில்வா ஆகியோருடன், 600 பங்குபற்றுநர்களும் பங்கேற்றிருந்தனர். 

ஹல்பே டீ தலைமை அதிகாரியும், U.H.E குரூப் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான எரந்த அபேரட்ன கருத்து தெரிவிக்கையில், 'தேசிய ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கலில் 2 தங்க விருதுகளை வெற்றியீட்டுவதற்கு, எமது செயலணியினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் பக்கபலமாக அமைந்திருந்தது. குடும்ப வியாபாரமாக அமைந்துள்ள இந்த வர்த்தக செயற்பாடுகளில் பணியாற்றும் ஊழியர்களையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உணரச் செய்வது என்பது நோக்கமாக அமைந்துள்ளது. ஹல்பே டீயில் இந்த புரிந்துணர்வு மற்றும் பின்பற்றல் செயன்முறை எமது ஊழியர்களை ஊக்குவித்த வண்ணமுள்ளது. எமது ஊழியர்களுக்கு வலுச்சேர்ப்பதன் மூலமாக, உரிமையாண்மை மற்றும் சுதந்திரம் ஆகியன ஊக்குவிக்கப்பட்டு, தலைமைத்துவம் உயர்த்தப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சிந்தனையின் காரணமாக நாம் வெற்றிகரமாக இயங்கி வருவதுடன், தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்' என்றார்.

எரந்தவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ், ஹல்பே தேயிலை, 2 வருட காலப்பகுதியினுள் உயர்வான நிலைக்கு சென்றுள்ளது. போட்டிகரத்தன்மை வாய்ந்த சர்வதேச சந்தைகளுக்கு உயர் தரம் வாய்ந்த தேயிலையை உற்பத்தி செய்து, நேரடியாக ஏற்றுமதி செய்து வருகிறது.

தமது தாய் நிறுவனமான ஊவஹல்பேவத்த எஸ்டேட்ஸ் என்பதன் கீழ், ஹல்பே தேயிலை, தொடர்ச்சியாக சர்வதேச தரம் வாய்ந்த தேயிலை வகைகளான, கறுப்பு தேயிலை, பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை, கிறீன் டீ, சேதன தேயிலை, பழச்சுவை சேர்க்கப்பட்ட தேயிலை, ஹேர்பல் தேயிலை, வெள்ளை தேயிலை மற்றும் உடனடித் தேயிலை போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்த அனைத்து தயாரிப்புகளும் சர்வதேச ISO, HACCP, Ozone நட்புறவான மற்றும் சிங்க இலச்சினை பொறிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்த உற்பத்திகளின் தரம் மற்றும் நியமங்கள் தொடர்ச்சியாக பேணப்படுகின்றன.

'எமது செயற்பாடுகளுக்கு கௌரவிப்புகள் மற்றும் விருதுகள் மூலமாக வழங்கப்பட்டுள்ள உறுதியின் மூலமாக, U.H.E குரூப் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க அர்ப்பணித்துள்ளதுடன், தேசத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கும்' என்றார்.
தேயிலையை பிரபல்யப்படுத்தும் வகையில் கம்பனியின் ஊவஹல்பேவத்த தொழிற்சாலையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்pன் காரணமாக, ஊவா பிராந்தியத்தில் புகழ்பெற்ற முதல் தர தேயிலை தொழிற்சாலையாக தெரிவாகியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X