2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இரண்டு மாதங்களுக்குள் மாற்றம் வரும்: நிதியமைச்சர் உறுதி

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பணப்பரிமாற்றுச் சட்டமும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் வசதிகளும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் எமது நாட்டின் நிதி நிலைமை, பலவீன நிலையிலிருந்து மீட்கப்பட்டு அதற்கான மறு சமநிலையும் மறுவேலையும் மேற்கொள்ளப்பட்ட ஒரு வலிமையான நிதிச்சூழல் ஏற்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

LOLC குழுவின் மூன்று நிறுவனங்கள் இலங்கையின் வங்கிசாரா நிதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட கடனைப் பெறுகின்றனர். இதன் மொத்தக் கடன் தொகையானது 247 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதன் உத்தியோகப்பூர்வ கடன் ஒப்பந்தக் கைச்சாத்திடல் நிகழ்வு சினமன் கிரான் ஹோட்டலில், புதன்கிழமை (24) இடம்பெற்றது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பங்குதார நிதி நிறுவனங்களின் தூதுவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 பல தரப்பட்ட வெளிநாட்டு நிதி பங்குதாரரிடமிருந்து 3 கடன்களை உள்ளடக்கியதாக, மொத்தமாக 247 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொண்டமை டுழுடுஊ குழு மீதான சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பறைசாற்றுகின்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க,

இக்கடன் திட்டங்கள், இலங்கை புதிதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான பேரின பொருளாதாரச் சூழலில் நம்பிக்கை, உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருவதில் பெரும்பங்காற்றும். இவ்வாறான முதலீட்டாளர் ஆர்வம் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதியாக்கும். மிகவும் திறமையான பொருளாதாரக் கொள்கைகள் கூட, நாடு எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முற்றாக ஒழிக்க உதவாது. உள்நாட்டு,சர்வதேச சந்தைகளிலிருந்தான கடன்கள் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம். அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையை தீர்த்து பொது நிதியை நிலைதகு பாதையில் செலுத்த பாரிய முயற்சியை மேற்கொள்ளும் வேளையில், நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் FMO, ADB மற்றும் அதன் பங்காளர்களின் பங்களிப்பு அங்கிகரிக்கப்பட வேண்டியதொன்றாகும்' என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X