Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 பெப்ரவரி 26 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃப்பின் பிரணாம புலமைப்பரிசில் திட்டம் இம்மாதம் இன்னொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது. அதன் 15வது சுற்று புலமைப்பரிசில் பரிசளிப்புடன் இதுவரை இந்தத் திட்டத்தினால் நன்மை அடைந்தவர்களின் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது.
நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த சிரேஷ்ட கல்விமான்கள், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட இந்தப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. மேலும் 154 பேருக்கு ரூபா 10 மில்லியனனை விட அதிக பெறுமதியுள்ள புலமைப்பரிசிலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
செலிங்கோ காப்புறுதி கொள்கைகளைக் கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் கல்வி ரீதியாகவும் ஏனைய செயற்பாடுகளிலும் அடைந்துள்ள வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் மாவட்ட ரீதியாக அடைந்து கொள்ளும் வெற்றி, விளையாட்டு, கலை, கலாசாரம், நாடகம் மற்றும் புத்தாக்க செயற்பாடுகளில் தேசிய மட்டத்திலான சாதனைகள் என்பன கௌரவிக்கப்பட்டு அதற்கான வெகுமதிகள் வழங்கப்படுகின்றன.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பேராதனைப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மிகவும் விவேகமான மாணவர்கள் தமது முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வர புலமைப்பரிசில்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதை விளக்கினார். இலங்கையின் கீர்த்திமிக்க கல்வியியலாளர்களான ஊ.று.று. கண்ணங்கர, சேர். டீ.பி.ஜயதிலக்க இந்தியாவின் அரசியல் சாசனத்தை வகுத்த கலாநிதி. டொக்டர். அம்பேத்கார் ஆகியோரும் இத்தகைய புலமைப்பரிசில்களைப் பெற்று கல்வி கற்றவர்களே என அவர் நினைவூட்டினார்.
சமூக மேம்பாட்டுக்கு கல்வி மிகவும் முக்கியத்துவமானது என்பதை வலியுறுத்திய பேராசிரியர் திஸாநாயக்க இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கும் பெற்றோர்களின் அளவற்ற மகிழ்ச்சியையும் தன்னால் உணர முடிவதாகக் கூறினார். எல்லாப் பிள்ளைகளும் தம்மிடம் இருப்பதைவிட இன்னும் மேலதிகமாகப் பெற்று வாழ்க்கையில் உயர் நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் சகல பெற்றோரினதும் எதிர்ப்பார்ப்பாகும். பெற்றோரின் இந்த அபிலாஷைகள் நிறைவேற பிரணாம புலமைப்பரிசில் வழிவகுக்கின்றது என்று அவர் மேலும் கூறினார்.
செலிங்கோ லைஃப் பணிப்பாளரும் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷார ரணசிங்க பேசும் போது இன்று வரை 110 மில்லியன் ரூபாவை இந்தத் திட்டத்துக்கு அர்ப்பணித்துள்ள செலிங்கோ லைஃப் அதை ஒரு செலவாகக் கருதவில்லை. இலங்கையின் எதிர்காலத்தின் மீது செய்யப்பட்டுள்ள ஒரு முதலீடாகவே அது கருதப்படுகின்றது என்றார்.
ஏற்கனவே இருக்கின்ற ஆற்றல்களுக்கு அப்பால் தலைமைத்துவ தகைமைகள் மற்றும் பண்புகள் என்பனவற்றை வலியுறுத்திய அவர் 90 வீதமான தலைமைத்துவ தகைமைகளும் பண்புகளும் வெளியில் தெரியாமலேயே பலரிடம் மறைந்து காணப்படுகின்றன என்றார். 'உங்கள் ஆற்றல்கள் உங்களை உயர் நிலைக்கு கொண்டுவர முடியும். ஆனால் உங்களிடம் உள்ள நற்பண்புகள் தான் உங்களை அந்த இடத்தில் தக்க வைக்கும்' என்று மேலும் கூறினார்.
செலிங்கோ லைஃப் பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2015ல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 26 மாணவர்களும், க.பொ.த சாஃத பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்ற 25 மாணவர்களும், 2014 க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த இஸட் புள்ளியைப் பெற்றுக் கொண்ட 26 மாணவர்களும், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் இஸட் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட 69 மாணவர்களும், தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத் துறை, கலை, கலாசார, நாடக மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றில் சாதனை படைத்த எட்டு பேரும் தமக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த சுற்று பிரணாம திட்டத்தின் மூலம் இதுவரை இந்தப் புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு முதல் செலிங்கோ லைஃப் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவையும், அதேபோல் சாதாரண தரம் சித்தி அடைந்தவர்களுக்கான கொடுப்பனவு, உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றவர்களுக்கான கொடுப்பனவு என்பனவற்றையும் அதிகரி;த்துள்ளது. க.பொ.த உயர்தரத்தில் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை மாவட்ட ரீதியாகப் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த ஆண்டு முதல் அதிகரிக்கப்பட்டது.
செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு நன்மைகளுள் பிரணாம திட்டம் கம்பனி கல்விக்கு அளித்து வருகின்ற முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. செலிங்கோ லைஃப் வெகுமதி திட்டத்தில் இது பிரதான இடம் பிடிக்கின்றது.
இலங்கையின் மிகச் சிறந்த வர்த்தக முத்திரைகளுள் ஒன்றாக சுயாதீனமான முறைகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2004 முதல் நாட்டின் நீண்டகால காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமாகத் திகழ்கின்றது. உள்ளுர் ஆயுள் காப்புறுதி கம்பனிகளுள் மிகப் பெரிய கிளை வலையமைப்பையும் அது கொண்டுள்ளது. வர்த்தக சமநிலையை பேணுதல் மற்றும் சமூக ரீதியான அர்ப்பணம் என்பனவற்றுக்காக இந்த நிறுவனம் உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளையும் வென்றுள்ளது.
3 minute ago
8 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
35 minute ago