2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இறப்பர் விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு சியெட் ஆதரவு

Freelancer   / 2024 ஜனவரி 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியெட் களனி ஹோல்டிங்ஸ், அதன் விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமான இறப்பர் விவசாயிகளின் குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக ஒரு புதிய சமூகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

10,000 விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து 100 சதவீத இயற்கை இறப்பர் தேவைகளைக் கொண்ட இலங்கையின் டயர் தேவைகளில் பாதியை உற்பத்தி செய்யும் சியெட், இறப்பர் வளரும் பகுதிகளில் பாடசாலை புத்தகப் பைகள், எழுதுபொருட்கள் மற்றும் கல்வித் தேவைககளுக்கான பிற பொருட்களையும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

மதுகம கல்வி வலயத்தை மையமாகக் கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமான நல்ல குடியுரிமை முன்முயற்சிகளின் 'சியட் கெயார்ஸ்' கொள்ளளவின் ஒரு பகுதியானது, சியெட் டயர்களை அதிகம் பயன்படுத்தும் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பல்லேகொடவில் அமைந்துள்ள பல்லேகொட தமிழ் பாடசாலை மற்றும் இட்டப்பனவிலுள்ள மிரிஸ்வத்த தமிழ் பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளும் முதலாவதாக பயனடைந்துள்ளன. இந்த பாடசாலைகளை அண்மையில் சியெட் மற்றும் இலங்கை இராணுவத்தின் பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டதுடன் 119 மாணவர்களுக்கு பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்றவற்றுடன் சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சித் திட்டம் குறித்து சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி தத்லானி கருத்துத் தெரிவிக்கையில், 'இறப்பர் விவசாயிகள் எமது டயர் உற்பத்திச் செயற்பாட்டிற்கு இன்றியமையாதவர்கள் என்பதால், அவர்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எமக்கு கவலையளிக்கிறது. மாணவர்களின் கல்வி செலவு மிகவும் உயர்ந்துள்ளது, இந்நிலையில் மேலும் சில செலவுகளை ஈடுசெய்யவும், மாணவர்கள் இடைவிலகல் விகிதத்தைக் குறைக்கவும் எமது இந்த திட்டத்தால் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இது எங்களின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு நோக்கங்களுடன் நன்றாக ஒத்துப்போகிறது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X