Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் (SOS Children’s Villages Sri Lanka) அண்மையில் தேசமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் #childinme என்ற ஊக்குவிப்பு திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. உலக சிறுவர் தினம் கொண்டாடப்படும் இந்த பொருத்தமான தருணத்தில் குறித்த இந்த டிஜிடல் 'நம்பிக்கை-திரட்டும் (digital ‘hope-raising’) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை இவ்வாண்டின் இறுதி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்குவிப்பு செயற்திட்டமானது பொது மக்கள் தம் ஒவ்வொருவருள் மறைந்திருக்கும் குழந்தை மனப்பான்மையின் வயதினை கண்டறிந்து, அதே வயதுள்ள SOS குடும்பத்தில் வதியும் குழந்தைக்கு ஆதரவு அளித்தலை ஊக்குவிக்கின்றது.
இந்த ஊக்குவிப்பு முனைப்பில் கலந்து கொள்ள விரும்பினால், www.soschildinme.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று, தளத்தில் உள்ள இணைய விண்ணப்ப படிவத்தல் உங்கள் வயதை குறிக்கும் இரு இலக்கங்களை குறிப்பிடுங்கள். இணையத்தளமானது, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனத்தின் வயதினை உங்கள் வயதினை குறிக்கும் இரு இலக்கங்களையும் இணைத்து கணிப்பிட்டு அளிக்கும். உங்கள் வயது 21 ஆயின், இரண்டு மற்றும் ஒன்று ஆகிய இலக்கங்கள் கூட்டப்பட்டு உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தையின் வயதை தெரிவிக்கும். அதாவது 21 வயதாயின், உங்களுக்குள் இருக்கும் குழந்தையின் வயது மூன்று ஆகும். குறித்த இந்தக் கணிப்பீடு இடம்பெற்றதும், இணையத்தளமானது, அதே வயதுள்ள இலங்கையிலுள்ள சிறுவர்களுடன் இணைப்பினை ஏற்படுத்தும். நீங்கள் அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்வதுடன், இணையத்தளத்தின் ஊடாக அவர்களுக்கு நிதியுதவி செய்து ஆதரவளிப்பதற்கான வாய்ப்பும் கிட்டும். அதற்கமைய நீங்கள் SOS சிறுவர் கிராமங்களிற்கு நன்கொடை அளிக்கலாம், அல்லது குறித்த சிறுவர்களுடன் தன்னார்வ அடிப்படையில் உங்களுடைய நேரத்தினை செலவு செய்ய முடியும்.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க நீங்கள் விரும்பினால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தன்மையின் வயதினை வெளிப்படுத்தும் #childinme வயதை எழுதிய காகிதத்துடன் செல்ஃபீ புகைப்படம் ஒன்றினை எடுத்து www.soschildinme.lk என்று தலைப்பிட்டு Facebook, LinkedIn, Instagram, Skype, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் அதனை பதிவு செய்ய முடியும். இந்த டிஜிடல் ஊக்குவிப்பு செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் Leo Burnett Solutions Inc மற்றும் சர்வதேச விளம்பரப்படுத்தல் வலையமைப்பான Leo Burnett Worldwide ஆகியவற்றினால் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயற்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஊக்குவிப்பு செயற்திட்டம் குறித்து கருத்துரைத்த இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் ஆனந்த கருணாரத்ன அவர்கள் தெரிவிக்கையில் 'இலங்கையெங்கும் உள்ள சிறுவர்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் எமது உள்நாட்டு சமூகத்தினையும் இணைந்து கொள்ளுமாறு கோருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இந்த முனைப்பில் இணைந்து கொள்வதன் ஊடாக இலங்கையில் உள்ள SOS சிறுவர் கிராமத்தில் வளரும் குழந்தை ஒன்றுடன் இணைப்பினை பேண முடியும் என்பதுடன், அவர்களுக்கு தேவையான பண மற்றும் உணர்வு ரீதியிலான ஆதரவினை ஒருவரால் அளிக்க முடியும். உங்கள் பங்களிப்புகள் இந்த குழந்தைகளின் பராமரிப்பிற்கு எம்மால் பயன்படுத்தப்படும் என்பதுடன் அவர்கள் வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கும். இந்த ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்பதுடன், மற்றவர்களையும் பங்குபற்ற ஊக்குவிக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். SOS சிறுவர் கிராமங்களில் உள்ள நாம், குடும்பக் கட்டமைப்பு ஆனது குழந்தையின் வளர்ச்சியிலும், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதிலும் தலையாய பங்கினை கொண்டுள்ளது என்பதை நம்புகின்றோம். குடும்பம் சார்ந்த அக்கறையானது, குழந்தை ஒன்றின் வாழ்வில், அதன் SOS பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் நீண்ட நாள் உறவினை பேணுவதற்கு வழிவகுப்பதுடன் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வின் பெறுமானங்களை கற்றறிந்து, முழுமையான ஒரு நற்பண்புள்ள மனிதராக வளர்வதற்கு உதவி செய்கின்றது என்பதில் உறுதியாக உள்ளோம். குடும்பக் கட்டமைப்பு ஒன்றில் வளரும் குழந்தைக்கு அதன் பின்னைய வாழ்க்கைக்கு தேவையான உறுதியான அடித்தளம் கிடைக்கின்றது. எமது SOS சிறுவர் கிராமங்களை நாம் அதற்கமைய அன்பான குடும்பம் ஒன்று அளிக்கக்கூடிய ஆதரவான சூழல் ஒன்றினை குழந்தைகள் பெறும் வகையில் கட்டமைத்துள்ளோம். இதன் மூலம் இங்கு வளரும் இக்குழந்தைகள் நாளைய எதிர்காலத்தினை பயமின்றி, துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும்' என்று தெரிவித்தார்.
SOS சிறுவர் கிராமங்கள் உலகளாவிய ரீதியல் குடும்பங்களுக்கு ஆதரவளித்து, இடர்களில் சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்களுக்கு அன்பான குடும்பச் சூழலை அளித்தவாறு 130 ற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. 60 வருடங்களுக்கும் மேலாக SOS சிறுவர் கிராமங்கள் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள அங்கத்தவர்கள் மற்றும் பங்காளர்களிடமிருந்து குடும்பங்களுக்கு ஆதரவளிக்குமாறு அல்லது மாற்று நடவடிக்கைகளை அளிக்குமாறு கோரியபடி செயற்படுகின்றது. உதாரணமாக SOS சிறுவர் கிராமங்களில் அக்கறையுள்ள ஒருவரின் அன்பு அத்தியாவசியமாகின்றது. எனவே உங்கள் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். SOS சிறுவர் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் அனைத்து முனைப்புகளும் குழந்தை ஒருவரின் சிறப்பான வாழ்வுக்கு வழிவகுக்கும் நோக்கிலேயே இடம்பெறுகின்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மேம்பாட்டு திட்டம் ஒன்று கைக்கொள்ளப்படுகின்றது. மேலதிகமாக SOS சிறுவர் கிராமங்கள் நீண்ட கால அடிப்படையில் பிள்ளைகளுக்கான ஆதரவுத் திட்டம் ஒன்றினைக் கைக்கொள்கின்றது. இதன் மூலம் சிறுவர் ஒருவர் அல்லது இளம் பராயத்தவர் எதையும் தாங்கக்கூடிய உறவுகளை மேம்படுத்திக்கொள்வதுடன், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களையும் திடசங்கற்பத்துடன் முன்னெடுக்கக்கூடிய மனப்பாங்கினை பெற்றுக்கொள்கின்றனர். 1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SOS சிறுவர் கிராமங்கள் அன்பான குடும்பக் கட்டமைப்பு, கல்வி மற்றும் அக்கறைக்கான ஆதரவு ஆகியவற்றை அளித்து குழந்தைகளுக்கு சகாயமளிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றது. இலங்கையிலுள்ள SOS சிறுவர் கிராமங்கள் கடந்த 34 வருடங்களாக சிறுவர்களின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தினை மேற்கொண்டு வருவதுடன், தமது 35வது வருடாந்த பூர்த்தியினை எதிர்வரும் 2016ம் ஆண்டு சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் இந்த ஸ்தாபனமானது, ஏறத்தாள 42,000 சிறுவர்களுக்கு மேல் பராமரித்துள்ளதுடன், குடும்பம் சார்ந்த கட்டமைப்பு ஒன்றினை அளிப்பதனை முக்கிய நோக்காக கொண்டுள்ளது. இந்த புத்தாக்க கருத்தாக்கத்தினை கொண்ட ஊக்குவிப்பு செயற்திட்டமானது, சமூகத்தில் முக்கிய இடத்தினை வகிக்கும் சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரையும் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025