2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை கோழி இறைச்சி ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்வது எப்போது?

Gavitha   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோழி இறைச்சி உற்பத்திக்கு இணைவாக உள்நாட்டு கோழி இறைச்சி கொள்வனவும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வருடத்தினுள் ஒரு நபரினால் உட்கொள்ளப்பட்ட கோழி இறைச்சி சராசரியாக 2.5 கிலோகிராமாக இருந்தது. எனினும் சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்பில் அப்பெறுமதி வருடத்துக்கு 5.5 கிலோகிராமாக அதிகரித்துள்ளது. தற்போது இலங்கையில் ஒரு வருடத்தினுள் ஒரு நபரினால் உட்கொள்ளப்படும் கோழி இறைச்சியின் அளவு சராசரியாக 8.2 கிலோகிராமாக அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் மாமிச வகைகள் உட்கொள்ளும் அளவு அதிகரித்து வரும் நிலையில், எமது நாட்டின் தனிநபர் வருமானமும் அதிகரித்து வருவதால் எதிர்வரும் காலங்களில் இப்பெறுமதி 10 கிலோகிராமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இவ்விருத்திப்படிக்காக வேண்டி சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டிருக்கின்றார்கள். கோழி இறைச்சி உற்பத்தி, கோழிகளை விருத்தி செய்தல், மற்றும் கோழிப் பண்ணைகளை நடாத்திச் செல்லல் என்பவற்றில் காணப்படும் உலகளாவிய தொழில்நுட்பங்கள் மற்றும் முறைமைகளை மிகவும் நுண்ணிய முறையில் கற்றறிந்து அவற்றை பயன்படுத்துவதால், உற்பத்திச் செலவுகளை குறைத்துக்கொண்டு, மிகவும் துரிதமான முறையில் உற்பத்திச் செயன்முறையைப் பேணிச்செல்வதன் மூலம், செலவாகும் காலத்தைக் குறைத்து, அவற்றுக்குத் தேவையான இட வசதிகள், உணவு வழங்கல் கொள்ளளவு, மனித வளக் காலம், உபகரணங்கள் உட்பட உற்பத்திச் செயற்பாட்டில் சுற்றாடலுக்குள்ள பாதிப்பு என்பவற்றைக் குறைத்துக்கொள்ள முடியுமாகியுள்ளது. வாழ்க்கைச் செலவு கூடிக்கொண்டு செல்லும் இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டின் சமூகத் தேவையாக இருந்துகொண்டிருப்பது என்னவெனில், ஒரு பொருளின் உற்பத்திச் செலவை குறைத்தல் என்பது குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்கள் சென்றடைவதாகும்.

உயர் போஷணைகளை உள்ளடக்கிய கோழி இறைச்சியில் ஏனைய மாமிச வகைகளை விடவும் குறைந்தளவே கொழுப்பு காணப்படுகின்றது. ஏனைய மாமிச உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் இது பிரபலமான உணவாகும். கோழி இறைச்சியில் விட்டமின் ஏ, ஈ, கே, பீ6, பீ12, ஃபோலேட், இரும்புச் சத்து, கல்சியம், மக்னீசியம், மற்றும் செலினியம் என்பன காணப்படுகின்றன. இதிலடங்கியுள்ள பீ6 ஆனது இருதய நோய் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பத்தைக் அதிகரிக்கக்கூடிய ஹோமோசிஸ்ட்டின் எனப்படும் அமினோ அமிலத்துக்கு எதிராக செயற்படக்கூடியது. அத்துடன் இருதய நோய்க்குரிய பிரதான காரணமான கொலஸ்ட்டரோல் அளவை குறைப்பதற்கு உதவுகின்ற நிகொட்டினிக் அமிலம் கோழி இறைச்சியில் காணப்படுகின்றது.

கோழி இறைச்சியின் விலையை குறைவாகப் பேணிக் கொள்வதற்கு  இணைவாக கோழி இறைச்சியின் தரத்தை உயர் மட்டத்தில் வைத்துக்கொள்ளல் க்ரிஸ்ப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் மேற்கொள்கின்ற சிறந்த மூலோபாயமாகும்.

இங்கு முக்கிய விடயம் என்னவெனில் உற்பத்தியில் அல்லது சேவை வழங்குவதில், அடிப்படை உற்பத்திச் செயற்பாட்டில் மற்றும் விநியோகத்தில் அது பற்றி பூரணமாகவோ அல்லது சந்தர்ப்பங்களுக்கேற்ப நிறுவனத்துக்குள்ள நிர்வாக ஆளுமை மிக முக்கியமாகும்.

உதாரணமாக க்ரிஸ்ப்ரோ நிறுவனம் எப்போதும் முயற்சிப்பது தமது பண்ணையிலிருந்து தூய அதிசிறந்த கோழி இறைச்சிகளைச் சந்தைக்கு விடுவிப்பதற்காகும். இறைச்சி உற்பத்தி மற்றும் பொதியிடல், விநியோகம் என்பவற்றுக்கு மேலதிகமாக    விஷேடமாக தமது பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளுக்கு அதிசிறந்த தூய தானியங்களை உணவாக வழங்குவதற்கு அவற்றை பயிரிடல், முதிய பிராணிகளை முறையாக பராமரித்தல், என்பன முக்கியமானவையாகும்.

க்ரிஸ்ப்ரோ நிறுவனம் தமது பண்ணைகளுக்காக வேண்டியே உணவு உற்பத்தி நிலையமொன்றை நிறுவியுள்ளதுடன், மேற்குறிப்பிட்டதைப் போன்று கோழி இறைச்சி உற்பத்தி சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் தேவையான வசதிகளைப் பூர்த்திசெய்துள்ள இலங்கையின் ஓரேயொரு கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமாக அந்நிறுவனம் திகழ்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X