Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக தொடர்ந்து 11வது தடவையாகவும் நாட்டின் மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனமாக தொடர்ந்து ஐந்தாவது வருடமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய நிறுவனங்களைத் தரப்படுத்தும் LMD யின் தரப்படுத்தலிலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் மிகவும் நேர்மையான நிறுவனம் என்ற ரீதியில் வங்கி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் நிதிச் செயற்பாடுகளுள் முதலாமிடம் மற்றும் ஏனைய சில மதிப்பீடுகளை உள்ளடக்கி அதி சிறந்த ஐந்து நிறுவனங்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளது.
2015ம் ஆண்டில் இலங்கையின் அதிசிறந்த ஐந்து நிறுவனங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி திகழுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மொத்த முகாமைத்துவ வரிசையில் கொமர்ஷல் வங்கி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மொத்த தரங்களைப் பேணுவதில் மூன்றாம் இடம், கண்டுபிடிப்புக்கள், கூட்டாண்மை கலாசாரம் மற்றும் தூரநோக்கு ஆகிய பிரிவில் நான்காவது இடம், சுறுசுறுப்பு மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு ஆகிய பிரிவுகளில் ஐந்தாம் இடம் என பல தெரிவுகளில் கொமர்ஷல் வங்கி இடம்பிடித்துள்ளது.
2005ல் இந்தத் தெரிவுகள் தொடங்கப்பட்டது முதல் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கி என்ற நிலையை கொமர்ஷல் வங்கி தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
LMD இன் இந்த வருடத்துக்கான மிகவும் கௌரவத்துக்குரிய நிறுவனங்களுக்கான தெரிவில் பல்வேறு வகையான வர்த்தக செயற்பாடுகளைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்கள் பலவும் அதேபோல் மிகவும் பிரபலமான பல்தேசிய நிறுவனங்கள் பலவும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
'2015ல் முன்னணி ஐந்து கூட்டாண்மை நிறுவனங்கள் வரிசையில் இடம்பிடிக்க வங்கி பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளமையை அவதானிக்கின்ற போது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம். 'இவற்றுள் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கி என்ற எமது தொடர்ச்சியான தெரிவு, நிதிச் செயற்பாட்டில் முன்னணி வகிக்கின்றமை என்பன மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். ஏனைய பிரிவுகளிலும் நாம் மிகச் சிறந்த இடத்துக்கு தெரிவாகியுள்ளமை எமக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.
'LMD தரமானது பொது மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. அரச மற்றும் தனியார் பிரிவின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் உள் வாங்கப்பட்டே இந்தத் தெரிவுகள் இடம்பெறுகின்றன. நிதி செயற்பாடு, தரம்;, முகாமைத்துவ செயற்பாடு, நேர்மை, புத்தாக்கம், கூட்டாண்மை கலாசாரம், கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, தூரநோக்கு, தேசத்தைப்பற்றிய கடமைப்பாடு என்பன தெரிவுக்காக எடுத்துக் கொள்ளப்படும் பிரதான விடயங்களாகும். 2015 மதிப்பீட்டில் மேற் குறிப்பிட்ட பத்து விடயங்களில் ஒன்பது விடயத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கின்றமை அவதானிக்கத்தக்கதாகும்.
கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 243 கிளைகளுடனும், 615 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. இதுவே நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியாகும். ஐந்து வருடங்களாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியும் இதுவேயாகும். 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் பினான்ஸ் ஆசியா மற்றும் யூரோ மணி என்பனவற்றால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு; 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில்; இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago