Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
LMD சஞ்சிகையை வெளியிடும் மீடியா சேர்விசஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த கருத்துக்கணிப்பின் போது, இலங்கையில் காணப்படும் நன்மதிப்பைப் பெற்ற 20 நிறுவனங்களில் ஒன்றாக சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் (CBL) தெரிவு செய்யப்பட்டுள்ளது. குழுமத்தின் மூலமாக வருடாந்தம் வெளியிடப்படும் 'இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள்' எனும் சஞ்சிகையில் இந்த பெறுபேறுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த கருத்துக் கணிப்பை நெறியாள்கை செய்யும் பொறுப்பை LMD சஞ்சிகை மேற்கொண்டிருந்தது. நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களை தரப்படுத்தும் இந்த கருத்துக்கணிப்பை நீல்சன் நிறுவனம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 800 பங்குபற்றுநர்கள் கருத்துக்கணிப்புக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முகாமையாளர்கள் மற்றும் உயர்ந்த நிலைகளில் பணியாற்றுபவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. பதிலளித்தவர்களிடம், அவர்களின் மனதில் எழும் மூன்று நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடுமாறு கோரப்பட்டிருந்ததுடன், அவர்களின் பதில்கள் பதிவு செய்யப்பட்டு, ஒலிம்பிக் கணிப்பீட்டு முறைமைக்கு அமைய புள்ளிகள் கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துரம் பற்றிய விழிப்புணர்வு, புத்தாக்கம், இயக்கத்தன்மை, சமூக பொறுப்புணர்வு, கம்பனியின் நோக்கம் மற்றும் தேசத்துக்கு முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்ந்த ஸ்தானத்தில் CBL தரப்படுத்தப்பட்டிருந்தது. CBL இன் முன்னணி வர்த்தக நாமமான மஞ்சி, இலங்கையின் முதல் தர வர்த்தக நாமமாக தெரிவாவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. இதன் மூலம் தேசத்துக்கு முக்கியத்துவம் வழங்கி தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் எனும் நிலையை உறுதியாக பேண உதவியிருந்தது. மேலும், கம்பனியின் வளர்ச்சியில் மஞ்சி பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், தனது வர்த்தக நாமத் தெரிவுகளில் கீழ் பெருமளவு வெற்றிகரமான நாமங்களை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
CBL குரூப் பிஸ்கட்ஸ் வகைகளை தனது முன்னணி வர்த்தக நாமமாக 'மஞ்சி' உற்பத்திகளை தயாரித்து, விநியோகித்து வருகிறது. அத்துடன், இனிப்பு பண்டங்கள், சொக்லேட் வகைகள், கேக் வகைகள், சோயா தயாரிப்புகள், காலை வேளைக்கான தானிய ஆகாரங்கள் மற்றும் சேதன பழப் பொருட்கள் ஆகியவற்றையும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. குரூப்பின் கீழ் காணப்படும் ஏனைய வர்த்தக நாமங்களில் 'ரிட்ஸ்பரி', 'டியாரா', 'லங்காசோய்', 'சமபோஷ', மற்றும் 'நியுட்ரிலைன்' போன்றன உள்ளடங்கியுள்ளன. புத்தாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் சிறப்புகள் தொடர்பில் கம்பனி உறுதியான நிலையை பேணி வருகிறது. சர்வதேச ரீதியில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள CBL நிறுவனம், 55 க்கும் அதிகமான நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைமைத்துவம் மற்றும் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி சிறப்புகளுக்காக சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்டின் குழுமப் பணிப்பாளரும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரியுமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் காணப்படும் நன்மதிப்பைப் பெற்றுள்ள 20 நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். 48 வருட எமது வரலாற்றில், வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கத்துடன் கூடிய தரமான பொருட்களை வழங்குவது தொடர்பில் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளோம். எமது நுகர்வோர் மற்றும் சமூகத்துக்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்காக பல கௌரவிப்புகளையும் நாம் பெற்றுள்ளோம். தொழில்நுட்பம் மற்றும் மனித மூலதனம் ஆகியவற்றில் நாம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் மூலமாக சர்வதேச தரத்தை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்திருந்தது. அத்துடன், நாம் எப்போதும் பொறுப்பு வாய்ந்த வகையில் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளோம். எமது செயற்பாடுகள் கௌரவிக்கப்படுகின்றமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், தொடர்ந்தும் சிறப்பாக செயலாற்றுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி, உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவோம். அத்துடன் எம்நாட்டு பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மேம்படுத்துவோம்' என்றார்.
குழுமத்தின் நிதிப் பெறுபேறுகளில் பிரதான பங்களிப்பை வழங்குவதில் 'மஞ்சி' அதிகளவு பங்களிப்பை வழங்குவதுடன், நிலைபேறான செயற்பாடுகள் தொடர்பிலும் பங்களிப்பு வழங்கி வருகிறது. 'மஞ்சி' வர்த்தக நாமம் மற்றும் ஏனைய வர்த்தக நாமங்களின் மூலமாக பின்பற்றப்படும் கடுமையான தர முகாமைத்துவ செயற்பாடுகள் மூலமாக வெற்றிகரமான நிலையை எய்த உதவியாக அமைந்திருந்தது. நிறுவனங்களை தரப்படுத்தும் போது புத்தாக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதில் 'மஞ்சி' நாமம் தொடர்ச்சியான புத்தாக்கமான செயற்பாடுகளுக்காக பெருமளவு கௌரவிப்புகளை பெற்றிருந்தது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் புத்தாக்கமான சுவை அனுபவத்தை வழங்கி வருகிறது. அண்மையில் இலங்கையில் மஞ்சி BeeCee, மஞ்சி Crunchee மற்றும் மஞ்சி Baby Rusks ஆகியவற்றை சர்வதேச தரங்களுக்கமைய சகாய விலையில் அறிமுகம் செய்திருந்தது.
ஆறு பிரிவுகளில் தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை மஞ்சி முன்னெடுத்து வருகிறது. இதில் கல்வி, கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு, அனர்த்த உதவிகள் மற்றும் சமூக மேம்படுத்தல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. கல்வி பிரிவின் கீழ் மஞ்சி டிக்கிரி புலமைப்பரிசில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கல்வித்துறையில் தனியார் நிறுவனமொன்றின் மூலமாக முன்னெடுக்கப்படும் மாபெரும் புலமைப்பரிசில் திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக 'மஞ்சி ஹபனா புலமைப்பரிசில் பயிற்சிப்பட்டறை' இலவசமாக முன்னெடுக்கப்படுகி;னறமை குறிப்பிடத்தக்கது. சமூக மேம்படுத்தல் பிரிவில் 'மஞ்சி சமக கமட்ட சரண' திட்டம், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விளையாட்டு பிரிவின் கீழ், தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருவதுடன், பாடசாலை கிரிக்கெட் மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு தெரிவாகும் மெய்வல்லுநர்களுக்கும் உதவிகளை வழங்கி வருகிறது. கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில், பல கலைஞர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதுடன், புத்தாண்டு வைபவங்கள், மேடை நாடகங்கள் ஆகியவற்றுக்கு அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025