2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் KWID கார்களுக்கு பாதிப்பில்லை

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விநியோகிக்கப்பட்டுள்ள ரெனோல்ட் KWID கார்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்தியாவில் பெருமளவு விற்பனையாகி வரும் KWID  கார்களில் எரிபொருள் கட்டமைப்பில் கோளாறு உள்ளதா என மீளச்சோதிக்கும் வகையில் மீளக்கோரியுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டிருந்தன.  

2016 மே மாதம் 18ஆம் திகதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் இவ்வாறு மீளக்கோரப்பட்டுள்ளதாகவும், எந்தளவு கார்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது பற்றிய தகவல்களை ரெனோல்ட் நிறுவனம் உடனடியாக வெளியிடவில்லை.  

இந்நிலையில், இலங்கையில் ரெனோல்ட் ரக KWID கார்கள் 2016 மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. 2016 மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இலங்கையில் காணப்படும் கார்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சமந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

இலங்கையில் KWID  கார்கள் பெருமளவு வரவேற்பைப்பெற்றுள்ளதுடன், அதிகளவானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X