2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் புதிய களத்தை உருவாக்கியுள்ள ஏசியன் பெயின்ட்ஸ்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுர் வர்ணப் பூச்சு தொழில்நுட்பவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தி அவர்களுக்கு மேலும் வலுவூட்டி கணிசமான பங்களிப்பை பெறக் கூடிய வகையில் உன்னதமான பல்பரிமாண திட்டமொன்றை ஏசியன் பெயின்ட்ஸ் அறிமுகம் செய்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ் உலகளாவிய ரீதியில் 18 நாடுகளில் செயற்பாடுகளை கொண்டுள்ள ஒரு பல்தேசிய நிறுவனமாகும். 

புதிதாக அறிமுகம் செயயப்பட்டுள்ள மாஸ்டர் ஸ்ட்ரோகஸ் திட்டத்தில் ஒரே மாலைப்பொழுதில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களை சேர்ந்த 1100 க்கும் அதிகமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் தொழில்நுட்பவியலாளர்கள் இணைந்து கொண்டனர். அண்மையில் ஈகிள்ஸ் லேக்ஸ் ஸைட் வரவேற்பு மண்டபத்தில் இந்த அறிமுக விழா கோலாகலமாக இடம்பெற்றது.

ஏசியன் பெயின்ட்ஸின் வர்த்தக முத்திரை தூதுவரும் இலங்கை கிரிக்கட் நட்சத்திரமுமான குமார் சங்ககார இதில் விஷேட பங்கேற்றிருந்தார். ஏசியன் பெயின்ட்ஸ் தனது உற்பத்திகளைப் பயன்படுத்தும் பூச்சுக் கலைஞர்களின் தொழில்நுட்ப ஆற்றல,; அறிவு, செயற்பாடு, வேலைப்படை வருமானம் என்பனவற்றை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யவுள்ள முதற்கட்ட வேலைத்திட்டத்திலேயே இவர்கள் இணைந்து கொண்டனர். 

மாஸ்டர்ஸ்ட்ரோக்ஸ்; வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்சார் வர்ணப் பூச்சாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசி வழியாக இணைந்து பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் ஏசியன் பெயின்ட் வர்த்தக முத்திரை பொறிக்கப்பட்ட உற்பத்திகளின் பாவனை அவற்றை பயன்படுத்துவோருக்கான பயிற்சிகள் அவர்களுக்கான நன்மைகள் மற்றும் வெகுமதிகள் என பல தரவுகளை பேணக் கூடியதாக இருக்கும்.

இந்த முக்கிய அறிமுகம் பற்றி கருத்து வெளியிட்ட ஏசியன் பெயின்ட்ஸ் (லங்கா) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான ஜேகொப் குருவிலா கருத்து வெளியிடுகையில் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ் இலங்கையில் தொழில்சார் வர்ணப் பூச்சாளர்களுடனான எமது தொடர்பை புதியதோர் மட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. உள்ளுர் பெயின்ட் சந்தையில் இந்த வகை சார்ந்த ஒரே திட்டமாகவும் இது அமைந்துள்ளது. உள்ளுர் அலங்கார வர்ணப் பூச்சு சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ் ஏற்கனவே பல விரிவான உற்பத்திகளைக் கொண்டுள்ளது. புதிய ஆக்கபூர்வமான உற்பத்திகளை தொடர்ந்து தயாரிப்பவர்கள் என்ற வகையில் எம்மோடு இணைந்து பணியாற்றும் கலைஞர்களின் ஆற்றலை மேல் மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையும் எமக்குள்ளது.'

'மாஸ்டர்ஸ்ரோக்ஸ் உள்ளுர் சந்தைக்கும் கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் நாம் வழங்கும் அர்ப்பணத்துடன் கூடிய பணியை தொட்டுணரக் கூடிய ஒரு திட்டமாக அமைந்துள்ளது' என்று கூறினார்.

இந்த அறிமுக வைபவத்தில் உரை நிகழ்த்திய ஏசியன் பெயின்ட்ஸின் வர்த்தக முத்திரைத் தூதுவர் குமார் சங்ககார வர்ணப் பூச்சாளர்கள் தமது தொழில் குறித்து பெருமையடைய வேண்டும் என்றார் அவர்கள் தமது முன்;;னேற்றத்திற்கான உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்ளவும் கம்பனியுடன் விஷேட உறவினை வளர்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் உதவும் என்று கூறினார்.

ஏஸியன் பெயின்ட்ஸ் அலங்கார பெயின்ட் வகைகளிலும், பூச்சு வகைகளிலும் பல்வேறு விதமான உற்பத்திகளைக் கொண்டுள்ளது. பலகை பூச்சுகள், வாகனங்களுக்கான ஆற்றல்மிக்க OEM வகை உற்பத்திகள், கடல்சார் பெயின்ட்; வகைகள், வீதி அடையாள குறிப்பு பெயின்ட்கள், கைத்தொழில்சார் உற்பத்தி வகைகள் என பல உற்பத்தி வரிசைகளை இது உள்ளடக்கியுள்ளது. ஏஸியன் பெயின்ட்ஸ் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பல்நோக்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகளும் இங்கு அமைந்துள்ளன.

ISO 9001:2008 மற்றும் ISO 14001:2004 தரச்சான்றிதழ்களைக் கொண்டுள்ள ஏஸியன் லங்கா பெயின்ட் நிறுவனம் எபெக்ஸ் அல்டிமா, எபெக்ஸ், ACE, டெப்லோன் உடன் றோயேல், கிளஸிக், ப்ரீமியம் டெகோரா எமல்ஸன், எனாமல் பெயின்ட் வகைகள் என பல உற்பத்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்ளக மற்றும் வெளி தேவைகளுக்காக ஸ்கிம் கோட், எக்ரிலிக் புட்டி, தண்ணீர் பாதுகாப்பு தீர்வுகள், மேலும் வித்தியாசமான வகை தேவைகளுக்கான பெயின்ட்கள், றென்னர் இடாலியா வின் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட பலகைகளுக்கான பூச்சுகள் என இன்னோரன்ன பல உற்பத்திகளை கொண்ட ஒரு நிறுவனமாகவும் ஏஸியன் பெயின்டஸ் திகழ்கின்றது.

மேலதிக ஈயம், பாதரசம், ஆர்சனிக் குரொமியம் மற்றும் வேறு வகை கனரக உலோகங்கள் எதுவும் அற்ற உற்பத்திகள் என்ற உத்தரவாதமும் ஏஸியன் பெயின்ட்ஸ் உற்பத்திகளுக்கு உள்ளன.

ஏசியன் பெயின்ட்ஸ் உலகில் மிக முன்னணியிலுள்ள அலங்கார பூச்சுக் கம்பனிகளுள் ஒன்றாகும். இதன் வருடாந்த விற்பனை வருமானம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமானதாகும். இது 28 உற்பத்தி வளங்களை 18 நாடுகளில் கொண்டுள்ளதோடு 65 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X