2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை வங்கிக்கு 77 வயது பூர்த்தி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிதித்துறையில் மாற்றத்தைக் கொண்டு வந்த இலங்கை வங்கி, தனது 77ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது. வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்ளக்கூடிய இலங்கை வங்கி கடந்த 1939ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 77 ஆண்டு காலமாக, ஒரு சாதாரண வங்கிப் புத்தகத்திலிருந்து, அலைபேசி வங்கியியல், பண கொடுக்கல் வாங்கல்களுக்கான 24 மணிநேர டிஜிட்டல் சேவை உள்ளிட்ட பசுமை வங்கியியல் போன்ற பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி, இலங்கை வங்கி சாதணைப் படைத்துள்ளது.

அரச சபையின் உறுப்பினரான ஜோர்ஜ் ஈ டி சில்வாவின் தலைமையில், அரச உதவி பெறும் வங்கியான இலங்கை வங்கி உருவாக்கப்பட்டது.  பிரித்தானிய ஆளுநர் சேர் ஆண்ட்ரூ கெல்ட்கொட்டின் ஆதரவுடன், கடந்த 1939ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி, இல. 41, பிரிஸ்டல் தெரு, புறக்கோட்டை, கொழும்பில் இலங்கை வங்கியின் திறப்பு விழா இடம்பெற்றது.

அதன் பின்னர், 1941ஆம் ஆண்டு, மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டியில், இலங்கை வங்கியின் முதலாவது வெளிப்பிரதேச கிளை திறந்து வைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டுடன், கண்டி நகரில் திறக்கப்பட்ட கிளைக்கு 75 வயதாகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 627 கிளைகளைக் கொண்டுள்ள இலங்கை வங்கி 1200 வாடிக்கையாளர் தொடர்புக் கொள்ளும் முறைமைகளைக் கொண்டுள்ளது. மேலும் சுயதொழில் முனைவோருக்கு ஊக்குவிப்பு அளிக்கும் முகமாக, 15 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவுகளைக் கொண்டுள்ளது.

லண்டனில இலங்கை வங்கியின் வெளிநாட்டுக் கிளை திறந்து வைக்கப்பட்டவுடன் வங்கியின் வெளிநாட்டு வலையமைப்பகள் 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், 1981ஆம் ஆண்டு மாலே, 1995ஆம் ஆண்டு சென்னை, 2014ஆம் ஆண்டு சீசெல்சு போன்ற நாடுகளில் இலங்கை வங்கியின் வெளிநாட்டுக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டன.

இலங்கையின் முதலாம் தர வங்கியாக தொடர்ந்து 8 வருடங்களாக தனது இடத்தை தக்கவைத்து வருகின்றது. 2015ஆம் ஆண்டு, 25.3 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி, மிகவும் உயர்ந்த வருமானம் ஈட்டும் வர்த்தக நிலையம் என்ற சாதணையைப் படைத்துள்ளது.  

வங்கியின் 77ஆவது நிறைவு தினத்தையொட்டி, சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் உள்ளடங்களாக பெரஹெராக்கல் போன்ற நிகழ்வுகளை ஆகஸ்ட் 05ஆம் திகதி முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இலங்கை வங்கியின் தலைமையகத்தில் இன்று இரத்ததான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு, இலங்கை வங்கி வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X