2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை ஆடை நிறுவகத்தின் பணியாளர்களுக்கு ஆயுள், மருத்துவக் காப்புறுதிகள்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் உயர்நிலைச் சங்கமான இணைந்த ஆடைச் சங்க மன்றமானது செலிங்கோ காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 350,000 பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆயுள், மருத்துவக் காப்புறுதிகளை வழங்குவதற்காக உடன்பட்டுள்ளன.

பணியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 6 ரூபாயிலும் குறைவான தொகையே செலவாகும் செலிங்கோவின் 'ரன்சலு ரக்ஷா' காப்புறுதித் திட்டமானது ஒரு மில்லியன் ரூபாய்க்கான ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, விபத்து மரணம் ஏற்படின் 1.5 மில்லியன் ரூபாயை வழங்குவதோடு, பகுதியளவானதும் நிரந்தரமானதுமான அங்கவீனம் ஏற்படும் போது அதற்காக 500,000 ரூபாயும், முக்கியமான 39 நோய்களுக்கு 500,000 ரூபாய் வரையான காப்புறுதியும், மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டொன்று 30,000 ரூபாய் வரையில் மீளச்செலுத்துகையும், மரணச் செலவுகளுக்காக 30,000 ரூபாய் என்ற பங்களிப்பும் வழங்கப்படவுள்ளது.

செலிங்கோ லைஃப் காப்புறுதி, செலிங்கோ பொதுக் காப்புறுதி, இணைந்த ஆடைச் சங்க மன்றம், இலங்கையின் ஆடைத் தொழற்துறைகளின் வெகுமதி - நலன்புரித் திட்டமான 'ரன்சலு பிரணாம பிரிவிலேஜ்' என்ற திட்டத்தை முகாமை செய்யும் சனல் 17 ஆகிய நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்ற ஆழமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஆடைத் தொழில் நிறுவனங்கள் விரும்பி இணையும் குழுக் காப்புறுதியாகப் புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X