2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை பொருளாதாரத்துக்கான பங்களிப்புக்கு SLIIT பட்டதாரிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மாதங்களாக உலகளாவிய ரீதியில் மனிதர்களின் பொது எதிரியாக COVID-19 திகழ்கின்றது. தினசரி வாழ்க்கையில் இதன் தாக்கத்துடன் பணியாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக இலங்கையிலும், தற்போது நிலவும் சூழல், சகல வியாபார துறைகளிலும், சமூகங்களிலும் புதிய சவால்களை தோற்றுவித்துள்ளன.

ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில், தினசரி அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருள்கள், சுகாதார சேவைகள், நிதிச் சேவைகள், இதர கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது பெரும்பாலான பொது மக்களுக்கு பெரும் சவால்களை தோற்றுவித்துள்ளன. 

எவ்வாறாயினும், இந்த இடர் நிறைந்த காலப்பகுதியிலும், புதிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வணிக துறையில், வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புது தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில், பல வியாபாரங்கள் துரிதமாக ஒன்லைன் முறையில் தமது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் மாற்றமடைந்திருந்தன. குறிப்பாக, சில்லறை வியாபாரங்கள், வங்கிச் செயற்பாடுகள், கல்வி நடவடிக்கைகள் போன்றன இவ்வாறு e-வணிக தொழில்நுட்பத்தினூடாக எழுந்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதன் பிரகாரம், ஏற்கெனவே காணப்படும் வியாபாரங்கள், புதிய வியாபாரங்களுக்கு e-வணிக கட்டமைப்பொன்றை நிறுவி பேணுவதற்கு போதியளவு அறிவு, திறன்கள் கொண்டுள்ளவர்களுக்கு பெருமளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும், e-வணிக வியாபார மாதிரிகளை நிறுவுவதில் தகவல் தொழில்நுட்பம், வியாபார முகாமைத்துவம் போன்றவற்றில் காணப்படும் இரட்டை திறன் உள்ளடக்கங்கள் முக்கிய பங்காற்றும்.

தகவல் தொழில்நுட்பங்கள், தரவு விஞ்ஞானங்கள், மென்பொருள் பொறியியல், கணனி வலையமைப்புகள், தகவல் கட்டமைப்புகள், வியாபாரம், கட்டமைப்புகள் பகுப்பாய்வுகள், பல்லூடகம், சைபர் பாதுகாப்பு போன்றவற்றுக்கு கொரோனாவைரசுக்கு பின்னரான காலப்பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும். இலங்கையில் மாத்திரமன்றி, உலக சந்தையிலும் இந்நிலை காணப்படும்.

தேசத்தின் அரச சாரா பட்டமளிப்பு கல்வியகமாக திகழும் SLIIT, சுகாதாரம், ஆரோக்கியம், கணினி, பொறியியல் போன்ற பிரிவுகளில் சர்வதேச சவால்களை நிவர்த்தி செய்யக்கூடிய அடுத்த தலைமுறை திறமைகளை மேம்படுத்தக்கூடிய ஆற்றல்களைக் கொண்டுள்ளது. 

SLIIT ஐச் சேர்ந்த சகல கற்கைகளும் பிரயோக கல்வி அடிப்படையில் அமைந்துள்ளதுடன், தற்போது காணப்படும் தொழில் சந்தையின் அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும், SLIIT இன் உறுதியான நோக்குடைய கல்விசார் வழிமுறையானது அனுபவத்தை பிரயோக முறையில் பெற்றுக் கொடுப்பதில் உறுதியாக கவனம் செலுத்துகின்றது. வியாபாரங்கள், துறைசார் செயற்பாடுகளில் SLIIT ஏற்கெனவே பேணி வரும் உறவுகளினூடாக, இடைக்கால கல்வியாளர்களை இணைத்துக் கொள்வதில் முதல் தர கல்வியகமாக திகழச் செய்துள்ளதுடன், தனியார் துறையில் துறைசார் பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. 

கல்வியகத்தில் காணப்படும் நவீன வசதிகளினூடாக, மாணவர்களுக்கு பிரத்தியேக பயிலல் அனுபவங்கள் வழங்கப்படுவதுடன், சர்வதேச மட்டத்தில் அவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கின்றது.

SLIIT இன் கணனி பீடத்தினூடாக தேசிய தகவல் தொழில்நுட்ப துறைக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்படுகின்றது. கடந்த 20 வருடங்களில் இக்கல்வியகத்தினூடாக நாட்டின் மொத்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் கட்டமைப்பில் 60% க்கும் அதிகமானவர்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X