Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை, பரந்தன் கிளைகள் நவீன வசதிகள் படைத்த புதிய கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சௌகரியத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன், டிஜிட்டல் வங்கியியல் சேவைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரந்தன் கிளையை வங்கியின் விற்பனை, நாளிகை முகாமைத்துவத்துக்கான பிரதிப் பொது முகாமையாளர் சி. அமரசிங்க திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட மாகாண உதவிப் பொது முகாமையாளர் எம்.ஜே.பிரபாகரன், இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புதிய கிளை பரந்தன் சந்தி, A9 வீதியில் அமைந்துள்ளது.
வட்டுக்கோட்டை கிளை இல. 20, நவாலி வீதி, வட்டு தென் மேற்கு, வட்டுக்கோட்டை எனும் முகவரியில் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கிளையை வட மாகாண உதவிப் பொது முகாமையாளர் எம்.ஜே. பிரபாகரன் திறந்து வைத்தார்.
இந்தக் கிளைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்கப்படும் என்பதுடன், டிஜிட்டல் மயமான கொடுக்கல் வாங்கல்களை, இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இலங்கை வங்கியின் சகல வங்கியியல் சேவைகளையும் இந்த இரு கிளைகளிலிருந்து இப்பிரதேங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் முன்னரை விட மேலும் சௌகரியமாகத் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago