Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இவ்வாறு மொபிடெல் அனுசரணை வழங்குகின்றது.
இலங்கைக்கு இந்தப் போட்டியின் விறுவிறுப்பைக் கொண்டு வரும் வகையில், மொபிடெல் Esports பிரீமியர் லீக் போட்டித் தொடரில், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் தலா ஒரு அணி வீதம் பங்கேற்கும். போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் 2020 பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் இடம்பெற்றன. மாபெரும் இறுதிப் போட்டி பெப்ரவரி 22ஆம் திகதி இரத்மலானை, ஸ்டெய்ன் ஸ்டூடியோ அரங்கில் இடம்பெற்றது. இதில் 9 அணிகளான ஈஸ்டர்ன் கிளாடியேட்டர்ஸ், கந்துரட்ட கிங்ஸ், நோதர்ன் ரேஞ்ஜர்ஸ், ரஜரட்ட ஜயன்ட்ஸ், சப்ரகமுவ நைட்ஸ், சதர்ன் ஷார்க்ஸ், ஊவா பென்டிட்ஸ், வயம்ப ரெய்டர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வொரியர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் பரிசுக்காக போட்டியிட்டன.
இந்த மாபெரும் Esports போட்டித்தொடரின் பரிசுத் தொகையாக ரூ. 1,000,000 வழங்கப்பட்டது. தற்போது இந்தப் போட்டியில் பங்கேற்க 300க்கும் அதிகமான அணிகள் முன்வந்திருந்தன. இலங்கையின் Esportsஐ பொறுத்தமட்டில், ஒரு போட்டித்தொடரில் பங்கேற்ற ஆகக்கூடிய அணிகளாக இது அமைந்துள்ளது. மொபிடெலின் மேம்படுத்தப்பட்ட 4G இணைப்புத்திறன் ஊடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், Facebook, YouTube, Twitch, Mixer ஊடாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் Esports ஐ ஊக்குவிப்பது மற்றும் மெருகேற்றுவதில் Gamer.LK முன்னிலையில் திகழ்வதுடன், பெருமளவு ரசிகர்களை கவர்ந்திருந்த இலங்கையின் மாபெரும் Esports நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Esports தெற்காசிய கோப்பை போன்ற சர்வதேச Esports நிகழ்வுகளையும் Gamer.LK ஏற்பாடு செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025