Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 03 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, உறுதியான நிதிசார் மீட்சியைப் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து, தேசத்தின் மூலோபாய செயற்படுத்துனராக செயலாற்றும் வகையில் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை துரிதமாக மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நிலையில், தேசத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளை துரிதப்படுத்த SLT-MOBITEL எதிர்பார்ப்பதுடன், சகல துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவூட்டவும் முன்வந்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் உறுதியான இலாபத்தை பதிவு செய்திருந்தமையானது, தேசத்தின் தொழில்னுட்ப கட்டமைப்பு மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றை வரையறுக்கக்கூடிய டிஜிட்டல் உட்கட்டமைப்பை கட்டியெழுப்பும் நிலைக்கு SLT-MOBITEL ஐ நிலைநிறுத்தியுள்ளது.
இலங்கையின் பொதுத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதில் SLT-MOBITEL இன் முக்கியமான பங்களிப்பு என்பது மாற்றத்தின் மையமாக அமைந்துள்ளது. இலங்கை அரசாங்க வலையமைப்பு (LGN) என்பது, நிறுவனங்களுக்கிடையிலான இணைப்புக்கான முதுகெலும்பாகச் செயற்பட்டு, ஒப்பற்ற இணைந்த செயற்பாடுகளுக்கும், அனைத்து மட்டங்களிலும் உள்ள e-ஆளுகைத் தளங்களுக்கும் ஆதரவளிக்கிறது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் SLT-MOBITEL இனால் நிர்வகிக்கப்படும் LGN, உறுதித்தன்மை, பாதுகாப்பு மற்றும் அளவிடும்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்து, தேசத்தின் வளர்ந்து வரும் டிஜிட்டல் நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது.
SLT-MOBITEL குழுமத் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில். “SLT-MOBITEL இனால் இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காகவும், நவீன மயப்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பெருமளவு முதலீடுகளில் ஃபைபர் வலையமைப்புகள், 4G மற்றும் 5G மற்றும் cloud போன்றன அடங்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் மாற்றச் செயற்பாடுகளில் முதுகெலும்பாக அமைந்துள்ளன. இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) ஆதரவு மற்றும் வழிகாட்டல்களுக்கு நாம் பெரிதும் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த மேம்படுத்தல்களை மேற்கொள்வதில் அவர்களுடனான பங்காண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.” என்றார்.
பரீட்சார்த்த செயற்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான கொள்முதல் செயற்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து, இலங்கையின் 5G வலையமைப்பை அறிமுகம் செய்ய SLT-MOBITEL திட்டமிட்டுள்ளது. ஒளி்அலைகளின் அலைவரிசைகளின் (spectrum band) மூலோபாய ரீதியிலான ஒன்றிணைப்புகளினூடாக, செம்மையாக்கப்பட்ட வினைத்திறன் வழங்கப்படும் என்பதுடன், ஐந்தாண்டு காலப்பகுதியில் சாதனைமிகுந்த சேமிப்பையும் பெற்றுக் கொடுக்கும். வணிக ரீதியிலான 5G அறிமுகத்தினூடாக, ultra-low latency மற்றும் பாரிய இணைப்புகள் போன்றவற்றினூடாக தொழிற்துறைகளை மாற்றியமைக்கும். அத்துடன், ஸ்மார்ட் நகரங்கள், தன்னியக்கமான கட்டமைப்புகள், IoT உற்பத்தி மற்றும் அசல்-நேர அப்ளிகேஷன்கள் போன்றவற்றுடன், இலங்கையை சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னிலையில் திகழச் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.
அனைத்து அளவிலான வியாபாரங்களும் உலகத்தரம் வாய்ந்த இணைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை அணுகும்போது, டிஜிட்டல் பொருளாதாரம் செழித்து வளரும் என்பதை SLT-MOBITEL உணர்ந்துள்ளது. தொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பாரிய நிறுவனங்கள் உட்பட, தொழில்துறையின் முழு அளவிற்கும் சேவை செய்வதற்காக, வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட, அளவிடக்கூடிய தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
அனைத்து இலங்கையர்களாலும் தொழில்னுட்பம் அணுகப்படுவது மற்றும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளினூடாக உள்ளடக்கத்திற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு TRCSL இன் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலைகளை பைபர் மயமாக்கல் திட்டத்தின் கீழ், நூற்றுக் கணக்கான பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனூடாக மாணவர்களுக்கு அதி-வேக, நிலையான மற்றும் பொருடக்கம் வடிகட்டப்பட்ட Fibre-to-the-Home (FTTH) இணைப்பை அணுகும் வசதி வழங்கப்பட்டுள்ளது. “கமட்ட சன்னிவேதனய” (கிராமத்துக்கு தொடர்பாடல்) திட்டத்தினூடாக, கிராமிய பகுதிகளில் இணைப்புத்திறன் மேம்படுத்தப்பட்டு வருவதுடன், வருடாந்தம் விரிவாக்கப்பட்டு, நாட்டின் சகல பாகங்களுக்கும் டிஜிட்டல் வாய்ப்புகள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago