2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலங்கையின் தட்டாம்பூச்சிகளை உள்ளடக்கிய SLT-MOBITEL 2025 நாட்காட்டி

Freelancer   / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தை தொடர்ந்தும் கொண்டாடும் வகையில், SLT-MOBITEL தனது 2025 நாட்காட்டியில் இலங்கையின் தட்டாம்பூச்சிகளை (‘Dragonflies of Sri Lanka,’) உள்ளடக்கியுள்ளது. இந்த வண்ணமயமாக பூச்சிகளின் சூழல்சார் முக்கியத்துவத்தை இந்த நாட்காட்டி வலியுறுத்துவதுடன், நாட்டில் ஆரோக்கியமான சூழல்கட்டமைப்புகளை தக்க வைத்துக் கொள்வதில் இவை ஆற்றும் முக்கிய பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நீர்நிலைகளின் பாதுகாவலர்களாக தட்டாம்பூச்சிகள் அறியப்படுவதுடன், நீரின் தரத்தை குறிப்பதாகவும், சூழல்கட்டமைப்பின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவதுடன், பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும் பூச்சி இனமாகவும் அமைந்துள்ளது. அவற்றின் கண்கவர் வண்ணங்களினால் பொது மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படுகின்றன. இதர பூச்சி இனங்களுடன் ஒப்பிடுகையில் அளவில் பெரியனவாக அமைந்துள்ளதுடன், பறக்கும் ஆற்றலுடன், மனிதனால் மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் பிரசன்னத்தை கொண்டிருக்கும்.

இலங்கையில் 132 க்கும் அதிகமான தட்டாம்பூச்சி இனங்கள் காணப்படுவதுடன், அவற்றில் 59 அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளவையாகும். SLT-MOBITEL 2025 நாட்காட்டியில் 13 வகையான தட்டாம்பூச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், அவற்றின் சூழல்சார் முக்கியத்துவத்தையும், அழகிய தோற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நாட்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “குறிக்கோள் அடிப்படையில் இயங்கும் தேசிய வர்த்தக நாமம் எனும் வகையில் SLT-MOBITEL, மக்களை டிஜிட்டல் முறையில் இணைப்பது என்பதற்கு அப்பால் சென்று செயலாற்றுகின்றது. எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இயற்கையை வரவேற்பதற்கு ஊக்குவிப்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது. 2025 நாட்காட்டி தட்டாம்பூச்சிகளின் சூழல்சார் முக்கியத்துவம் மற்றும் அழகை வெளிப்படுத்துவதுடன், இலங்கையின் பாரம்பரியத்தின் அங்கமாக அமைந்துள்ள உயிரியல் பரம்பலை தூண்டுவதிலும் கவனம் செலுத்துகின்றது.  இந்தத் திட்டத்தினூடாக, பாதுகாப்பு மற்றும் நிலைபேறாண்மை தொடர்பில் உரையாடல்களை ஏற்படுத்தச் செய்ய நாம் எதிர்பார்ப்பதுடன், சூழல் வழிகாட்டல்களில் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்புடன் பொருந்தச் செய்வதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

SLT-MOBITEL இன் 2025 நாட்காட்டியில் 13 விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் காணப்படும் வெவ்வேறு தட்டாம்பூச்சி இனங்களின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு காட்சிப் பயணத்தை கொண்டதாக அமைந்திருப்பதுடன், கரையோரங்கள் முதல் மலைநாடுகள் வரை காணப்படும் தட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி மற்றும் சூழல்சார் பணிநிலை ஆகியவற்றை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. இந்த காட்சி அமைப்புகளை அனுபவம் வாய்ந்த கலைஞர்களான புலஸ்தி எதிரிவீர, பரமி வித்யாரத்ன மற்றும் உதேஷிகா பிரியதர்ஷனி ஆகியோரினால் வடிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு வளவாளராக அமில் சுமனபால ஆதரவளித்திருந்ததுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞானப் பிரிவின் புகழ்பெற்ற கள ஆய்வாளராகவும் திகழ்கின்றார்.

19 வருடங்களாக SLT-MOBITEL இன் வருடாந்த நாட்காட்டிகளில் இலங்கையின் சூழல் மற்றும் கலாசார அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. 2025 நாட்காட்டியில் இலங்கையின் தட்டாம்பூச்சிகள் உள்வாங்கப்பட்டுள்ளமையானது சூழல்சார் மீட்சி மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தை பேணுவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் SLT-MOBITEL தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X