Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
Bowling மற்றும் விநோத அம்சங்கள் நிறைந்த வளாகமான Playdium, தனது முதலாவது Playdium Pin League (PPL) ஐ அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. நாட்டின் விளையாட்டு மற்றும் ஓய்வுநேர அம்சங்களில் மிகவும் முக்கியமான முன்னேற்றமாக இது அமைந்திருந்தது.
அறிமுக போட்டித் தொடரில் சுமார் 22 அணிகள் பங்கேற்றதுடன், 100 க்கும் அதிகமான கூட்டாண்மை மற்றும் திறந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அனைவரும் Brunswick Champion Standard Bowling Alleys இல் போட்டியிட்டிருந்தனர். சர்வதேச போட்டித் தொடர்களில் பயன்படுத்தப்பட்டிருந்த அதே தொழில்னுட்பமாக அமைந்துள்ளது. நிகழ்வினூடாக விறுவிறுப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கையில் bowling இன் அதிகரித்துச் செல்லும் பிரபல்யத்தன்மையின் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்தப் போட்டியின் நிறைவின் போது, Panther Paces சம்பியன் விருதை வென்றதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே Fireball மற்றும் Ball Burners அணிகள் பெற்றுக் கொண்டன.
Playdium இன் பணிப்பாளர் அஷான் டி லிவேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் முதலாவது Premier Bowling League ஐ முன்னெடுப்பது என்பது எமக்கு மிகவும் பெருமைக்குரிய மைல்கல்லாகும். சர்வதேச நியமங்களுக்கமைய கூட்டாண்மைகள் மற்றும் தனிநபர்களுக்கு bowling அனுபவத்தை பெறுவதற்கும், போட்டியாக முன்னெடுக்கவும், விநோத செயற்பாடாக ஈடுபடவும் களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது எப்போதும் எமது நோக்காக அமைந்திருந்தது. அறிமுக PPL வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதனூடாக, இலங்கையில் இந்த விளையாட்டின் உறுதியான வளர்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வருடமொன்றில் இரு தடவைகள் இந்த போட்டியை முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
Shangri-La இன் One Galle Face Mall இன் கீள் தளத்தில் அமைந்துள்ள Playdium, இலங்கையின் மாபெரும் உலகத் தரம் வாய்ந்த bowling மற்றும் விநோத அம்சங்களுக்கான பகுதியாக சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் Brunswick Champion standard lanes மற்றும் மேம்படுத்தப்பட்ட புள்ளியிடல் கட்டமைப்புகளுக்கு அப்பால், 20,000 சதுர அடிகளில் அமைவிடம் காணப்படுவதுடன், பரந்த கவர்ந்திழுக்கும் பகுதிகளை கொண்டுள்ளது. அவற்றில், Arcade Games, Kids’ Play Area, VR Zone, Bumper Car Zone, Karaoke and Party வசதிகளுடன், Champions Table உணவகமும் அடங்கியுள்ளது.
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago