Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 13 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும், French International School of Colombo தனித்துவமான கல்வி வாய்ப்புகளை, இலங்கையில் வழங்குவதில் 40 ஆண்டுகால மைல்கல்லை, அண்மையில் கொண்டாடியது.
இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை, இந்தப் பன்மொழி கல்விப் பாடசாலை கோரவுள்ளது. கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதி, ஹெவ்லொக் வீதி, பைப் வீதி, பேஸ்லைன் வீதி ஆகியவற்றுக்கு அருகாமையில் EFIC அமைந்துள்ளது. 1979ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட EFIC, இலங்கையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பிரெஞ்சு கல்வியில் முன்னோடியாக இருந்து வருகின்றது. இது, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் கீழ் இயங்கி வருவதுடன், பிரான்ஸ் கல்வி அமைச்சால் அங்கிகரிக்கப்பட்டதும் ஆகும்.
வெளிநாட்டிலுள்ள பிரெஞ்சு கல்விக்கான முகவராண்மையான ' Agence pour l'Enseignement Français à l'Etranger (AEFE) ' இனாலும் இந்தப் பாடசாலை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. EFIC என்பது பாடசாலைகள் மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் உறுதியான வலையமைப்பாகும். இது பிரான்ஸ், ஐரோப்பிய வெளியுறவு அமைச்சகங்களால் மேற்பார்வையிடப்படுகிறது. மேலும், இது 139 நாடுகளில் அதன் ஒருங்கிணைப்பு, ஆதரவின் கீழ், சுமார் 522 பாடசாலைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கல்வி வலையமைப்பாகத் திகழ்கின்றது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டு மாணவர்களுக்கு மேலதிகமாக பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், தென்கொரியா, அசர்பைஜான், துருக்கி, பெல்ஜியம், பிரித்தானியா, மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை EFIC உள்வாங்கியுள்ளதுடன், பல்வேறு கலாசாரங்கள், மொழியியல் பன்முகத்தன்மை ஆகியவற்றின் மத்தியில், மாணவர்கள் வளர உதவுவதுடன், அடையாளங்கள், வேறுபாடுகளுக்கு மரியாதை செய்யும் பன்முகக் கலாசார சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025