2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையில் டயலொக் 250 மில். டொலர் முதலீடு

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் ஆசிஆட்டா குழுமம், 254.1 மில்லியன்  அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 46.1 பில்லியன்) முதலீட்டுக்காக, இலங்கை முதலீட்டுச் சபையுடன் இரண்டு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்த முதலீட்டுத் தொகையானது, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் 190.7 மில்லியன் அமெரிக்க டொலர், அதன் துணை நிறுவனமான டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் 63.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மொபைல், நிலையான 4G-LTE வலையமைப்புகளின் விரிவாக்கம், IP, ஃபைபர் வலையமைப்புகளின் பரிணாமம், குழுவின் Wi-Fi, புரோட்பாண்ட் வலையமைப்புக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் ICT உள்கட்டமைப்பு மேம்பாட்டின் பரந்த அளவைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த முதலீடு 5G இணைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பொருளாதார நன்மைகளைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையை 5G தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தும்.

இது, கடலின் அடித்தளத்துடன் இணைந்த கேபிள், தரையிறங்கும் நிலைய மேம்பாட்டுடன் இருக்கும், இது மிகவும் நம்பகமான, செலவு குறைந்த இணைய இணைப்பை வழங்கும். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் டயலாக் ஆசிஆட்டா பிஎல்சியின் தலைவர் டத்தோ அஸ்ஸத் கமலுடின், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இயக்குனர்/குழு தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்க, சபையின் தலைவர் சுசந்த ரத்நாயக்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இலங்கை முதலீட்டில், டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ்; (பிரைவேட்) லிமி​ெடட், இலங்கை முதலீட்டு வாரியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ் (பிரைவேட்) லிமி​ெடட் இயக்குனர் சுபுன் வீரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழு நிறுவன செயலாளர் திருமதி விரந்தி அட்டிகல்லே, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சுசந்த ரத்நாயக்க ஆகியோர் கையெழுத்திட்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X