2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையில் பொருத்தப்படும் KUV 100 வாகனம் அறிமுகம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, Ideal மோட்டர்ஸ் இணைந்து இலங்கையில் பொருத்தப்படும் KUV 100 NXT K6+ ரக காரை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. வெலிபென்னப் பகுதியில் அமைந்துள்ள வாகனப் பொருத்துகை நிலையத்தில் இந்தக் கார் பொருத்துகை செயற்பாடுகள் இடம்பெறுவதுடன், இந்தக் காரின் சில உதிரிப் பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

காரின் விற்பனை விலை 3 மில்லியன் ரூபாயாக அமைந்துள்ளதுடன், மெனுவல் கியர் கட்டமைப்பு மற்றும் 1.2 CC பெற்றோல் என்ஜின் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த காரை கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள காட்சியறையிலிருந்து கொள்வனவு செய்ய முடியும். 3வருடங்கள் அல்லது 100,000 கிலோமீற்றர்கள் வரை உத்தரவாதத்தை பெறலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X