2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இலத்திரனியல் வயர்கள் உற்பத்தி தொடர்பில் விளக்கம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு மின்சார வயர்கள் உற்பத்தி தொடர்பான அறிவுப்பகிர்வு விஜயமொன்றை களனி கேபிள்ஸ் பிஎல்சி கொழும்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கிளிநொச்சியில் தமது இருப்பிடங்களிலிருந்து பயணிப்பதற்கும் மீண்டும் வருகை தருவதற்குமான போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்றன களனி கேபிள்ஸ் பிஎல்சியினால் இந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கொழும்பில் அவர்களை களனி கேபிள்ஸ் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளான களனி மற்றும் சியம்பலாபே பகுதிகளில் அமைந்துள்ள களனி கேபிள்ஸ் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன் போது அவர்களுக்கு வௌ;வேறு வகையான வயர்கள் உற்பத்தி தொடர்பான விளக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும், களனி கேபிள்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவரால் இலத்திரனியல் தொழில்நுட்ப கட்டமைப்பில் பின்பற்றப்படும் புதிய முறைகள் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கான பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்து, களனி கேபிள்ஸ் பிஎல்சி, இந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்திருந்தது. அதன் மூலம் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு தமது தொழிலிருந்து பெற்றுக் கொள்ளும் ஆதாயத்தை சேமித்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தது.

களனி கேபிள்ஸ் பிஎல்சி வலய விற்பனை முகாமையாளர் கே ஏ ராஜ் குமார், விற்பனை முகாமையாளர் (விநியோகம்) சமிந்த வைத்தியதிலக மற்றும் விற்பனை கட்டுப்பாட்டாளர் ரால்ஃவ் ரொஷான் ஆகியோர் கிளிநொச்சியில் முன்னெடுத்திருந்த ஆய்வின் மூலமாக, குறித்த பிரதேசத்தில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு இலத்திரனியல் வயர்கள் உற்பத்தி செயன்முறை தொடர்பில் குறைந்தளவு அறிவு காணப்படுகின்றமை கண்டறியப்பட்டிருந்தது. எனவே, இந்த அணியினர், இந்த  தொழில்நுட்பவியலாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு வயர்கள் உற்பத்தி செய்யும் பொறிமுறை பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X