Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேவைப்பாடுகள், பொழுதுபோக்கு மற்றும் தொழில் முனைவுகள் துறையில் செயற்பட்டுவரும் குழு, சவால்களுக்கு மத்தியில் நெகிழ்திறனுடனான செயற்றிறன் செயற்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
அதன் மூலோபாய மூலமான நகர்வின் மூலம் வளர்ச்சித்துறையை நோக்கிய, எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி சவால்களுக்கிடையே வருடா வருடம் மீதான ஏழு வீத வருமான வளர்ச்சியைப் பெற்று 2016/17 வருடத்தின் முதல் காலாண்டில் 14,956 மில்லியன் ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) விடுவிக்கப்பட்ட கணக்காய்வுக்குட்படாத புள்ளிவிவரங்களின் படி, தேவைப்பாடுகள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் நல்ல செயற்றிறனால் உந்தப்பட்டு (தொழில் முனைவுகளை ஏனைய பகுதி செயற்பாடுகளில்), 2016 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த 3மாதங்களில் நிறுவனம் தனது செயற்பாட்டு இலாபத்தை மேம்படுத்தி (அது ஏனைய வருமானங்கள் மற்றும் நிதி ஆகு செலவைத் தவிர்த்து) வருடாவருடம் 20 வீதமாக்கி 400 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளது.
குழு மட்டத்தில் செயல் முனைப்பற்ற முதலீடுகளில் பணமற்ற எழுத்தழிப்பின் விளைவாக வரிக்கு முந்திய (PBT) குழுவின் காலாண்டுக்கான இலாபம் 378 மில்லியன் ரூபாய் வருடா வருடம் 6 வீதமாக குறைவடைந்துள்ளது. இதன் காரணத்தால் உரிமைப் பங்குடையோருக்கு அக் காலாண்டுக் காலத்துக்கான இலாபமும் வருடாவருட 18 சதவீதச் சரிவைக் கொடுத்து, 182 மில்லியன் ரூபாயைக் கொடுத்தது.
'வளர்ச்சியுறும் துறைகளில் மூலோபாய கவனம் செலுத்தியமையானது, சவால்களுக்கு மத்தியில் நெகிழ்ச்சியுறும் நிதிப் பெறுபேறுகளை 2016/17இல் தந்தமை' குறிப்பிடத்தக்கது ஒன்றாகும் என்றார், குழுவின் தலைமை நிறைவேற்று உத்தியோகத்தர் CEO) – – ஹனிவ் யூசுப். EU இன் GSP பிளஸ் மீண்டும் பெறப்படவிருக்கும் சாத்தியம் இப்போது அதிகரித்துவரும் பட்சத்திலும் மற்றும் பெரிய அபிவிருத்திகள் ஏற்பட்டு வருவதாலும், நாட்டிலும் அதேபோல் பிராந்தியத்திலும் உருவாகி வரும் சந்தர்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணுகிறோம்.
எக்ஸ்போலங்கா குழு, இப்போது மும் முனைகளில் தேவைப்பாடுகள், பொழுதுபோக்கு தொழில் முனைப்புகள், ஆகியவற்றில் திறன் மிக்க அதன்மையம் சாரா சொத்துகளை வளர்ச்சித்துறைகளில் ஈடுபடுத்தி கவனம் செலுத்துவனூடாக, 2016/17 நிதியாண்டின் முதல் காலாண்டில் தேவைப்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் அதியுயர் மட்ட வளர்ச்சியைக் கண்டது.
தேவைப்பாடுகளில், குழு தனது வருடாவருட வருமானத்தை 5 சதவீதம் அதிகரித்து அக்காலாண்டில் 12, 405 மில்லியன் ரூபாய் பெற்றது. இது முன்னைய வருடத்தின் அதே காலாண்டுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்களவு செயற்பாடு வான் வழியாக பொருட்கள் அனுப்பியதால் பெறப்பட்டது. கடல் மார்க்கமாகப் பொருட்கள் அனுப்பியமை இரட்டை இலக்க தொகையான வளர்ச்சியைப் பதிவு செய்ததோடு, குழுவின் முக்கியமான சந்தை இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் நன்றாகச் செயற்படுவதானது, ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக ஓடையில் வளர்ச்சியின் கன அளவு சிறப்பாக அதிகரித்து அதனால் உந்தப்பட்டதன் விளைவாகும்.
இந்தோனேஸியா, வியட்னாம் மற்றும் ஹோங் கொங் ( தூரகிழக்கு) குறிப்பிடத்தக்களவு செயற்பாடுகளைப் பதிவு செய்து, அதன் மூலம் முழுத்துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்குகின்றது. அதற்கு மேலாக ஆகு செலவை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்வனவு முயற்சிகள் ஆகியவை அடித்தளத்திலிருந்து இத் துறையில் வளர்ச்சியைக் கொடுத்தது.
பொழுதுபோக்குத்துறை வருடா வருட வருமான வளர்ச்சியாகிய 64 சதவீதத்தைக் கொடுத்து, முன்னேறி உயர்மட்ட 1,383 மில்லின் ரூபாயைக் கொடுத்தது. குழுவின் வெளிநோக்கிய வணிக பிரயாண செயற்பாடுகள் சாதகமான விளைவுகளைப் பதிவு செய்து, ஆண்டினூடாக அத்துறை காட்டிய வளர்ச்சியை மேலும் கட்டியெழுப்புவதாகவிருக்கிறது. எக்ஸ் போலங்கா ஹோல்டிங்ஸ் பொழுதுபோக்குத் துறையை வளர்ப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தவிருக்கிறது.
தொழில் முனைவுத்துறை அதன் காலாண்டில் 1,167 மில்லியன் ரூபாயை அதன் வருமானமாகப் பதிவு செய்துள்ளது. மீள் கட்டமைப்பு தொடர்பான மீள்வரா கட்டணமாக, 48 மில்லியன் ரூபாய் இத்தொகுதியில் வரிக்கு முந்திய இலாபத்தில் (PBT) பாதிப்பை ஏற்படுத்தியது.
எக்ஸ் போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி 2,800க்கு மேற்பட்ட ஊழியர்களுடன் 1978ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகிறது. தலைமையகத்தை கொழும்பு இலங்கையில் கொண்டுள்ள இந்த குழுவின் வலையமைப்பு 20க்கு மேற்பட்ட நாடுகளில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் செயற்படுகிறது.
52 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025