2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களை அறிமுகம் செய்யும் பீம் ஹெல ஒசு லங்கா

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்த காலமாக உள்நாட்டு மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனமான பீம் ஹெல ஒசு லங்கா, அண்மையில் மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் வலிமை கொண்ட மருந்துப் பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு மாத்தறை கும்புறுபிட்டிய உபாலி விஜேவர்தன மண்டபத்தில் புகழ்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருட்களில், Oxi-fresh mouthwashes, Suwoda Pas Panguwa Peyawa, Suwoda easy Tea, Iramusu Tea, Belimal Tea, Val Mee syrup மற்றும் rejuvenation power drink  Valpenela Amukkara syrup (சீனி உடன் மற்றும் சீனி இன்றி) ஆகியன அடங்கியுள்ளன.

ராஜகிரிய உள்நாட்டு மருந்துப்பொருட்கள் கல்வியகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பந்துல ரத்னசிறி மற்றும் திருமதி. குணவதி ரூபசிங்க ஆகிய இரு வைத்தியர்களும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பீம் ஹெல ஒசு லங்கா நிறுவனத்தை நிறுவியிருந்தனர். கம்பனியினால் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது தயாரிப்பாக 'பீம் கிறீம்' அமைந்துள்ளது. இலங்கையர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இவர்கள் இருவரும் சந்தையில் பெருமளவு மூலிகை உள்நாட்டு மருந்துப் பொருட்களை அறிமுகம் செய்திருந்தனர்.

பழமையான மருத்துவ இரகசியங்கள் மற்றும் சந்தைத் தேவைகளை கவனத்தில் கொண்டும், பல உள்நாட்டு வைத்தியர்களின் கோரிக்கைகளை செவிமடுத்தும், 300க்கும் அதிகமான மருந்துப் பொருட்களை இவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இவை Arishta, Asawa, Guli, kalka, Churna, syrup, medicinal tablets, ointments மற்றும் மருத்துவ பானங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் பல நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாக இந்தஉள்நாட்டு மருந்துப் பொருட்கள் அமைந்துள்ளன.

பீம் Paawatta Thal Sukiri syrup என்பது பீம் ஹெல ஒசு லங்கா நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களால் கூடிய நுகர்வோருக்கு பரிந்துரைக்கப்படும் இருமல் நிவாரணியாக அமைந்துள்ளது.

பீம் ஹெல ஒசு லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர் தேவ் ரணதுங்க கருத்து தெரிவிக்கையில், 'பீம் கிறீம் எனும் எமது முதலாவது தயாரிப்பு முதல், சகல தயாரிப்புகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் புகழ்பெற்றுள்ளமை சிறந்த விடயமாகும். காலாகாலமாக இந்த தயாரிப்புகளுக்கான கேள்வி அதிகரித்து வந்துள்ளது. எமது தயாரிப்புகளின் பிரபல்யத்தன்மை என்பது, இந்த புதிய தயாரிப்புகளை எமது தயாரிப்பு தெரிவுகளில் உள்ளடக்குவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'எமது சகல தயாரிப்புகளும் உயர் தரங்களுக்கமைய உற்பத்தி செய்யப்படுகின்றன. தூய நிலைகள் மற்றும் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன. இதற்காக எம்மிடம் நவீன இயந்திர வசதிகள் காணப்படுகின்றன. எமது ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பது, பழமை வாய்ந்ததும், பாரம்பரியமானதுமான மருத்துவ முறைகளை பின்பற்றி தமது ஆய்வுகளையும் இனங்காணல்களையும் முன்னெடுக்கின்றன. இவற்றின் மூலமாக புதிய தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. எமது பொருட்களின் தர நியமத்தை நாம் தொடர்ச்சியாக மெருகேற்றம் செய்கிறோம். இந்த நியமங்கள், எமது தயாரிப்புகளை உயர்ந்த மட்டத்தில் பேணியுள்ளதுடன், ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன' என்றார்.

பீம் ஹெல ஒசு லங்கா கம்பனி (www.beamchemicals.lk) தனது தொழிற்சாலையை அவிசாவளை, மிரிஸ்வத்த பகுதியில் கொண்டுள்ளது. இதற்கு உயர் தயாரிப்பு நியமங்கள் பேணப்படுகின்றமைக்காக ISO 9001- 2008 தரச்சான்றும் சிறந்த மேற்பார்வை செயற்பாடுகளுக்காக G.M.P தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X