Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில வாரங்களில் உலகளாவிய ரீதியில் மாணவர்கள் கல்வி பயிலும் முறைமையில் COVID-19 பரவல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மாபெரும் அரச சாரா பட்டப்படிப்பு வாய்ப்புகளை வழங்கும் உயர் கல்வியகமான SLIIT, ஊரடங்கு காலப்பகுதியிலும் மாணவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளை பாதுகாப்பாக தொடர்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணரந்து, தமது மேம்படுத்தப்பட்ட ஒன்லைன் கட்டமைப்பினூடாக விரிவுரைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. தினசரி அடிப்படையில் விரிவுரை வீடியோக்களை ஒன்லைனில் பதிவேற்றம் செய்வதுடன், மாணவர்களுக்கு தமது வசிப்பிடங்களிலிருந்தவாறே பயிலல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.
நாட்டில் காணப்படும் ஊரடங்கு சட்ட நிலை காரணமாக, ஒன்லைன் மூலமாக கற்கை மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. குறிப்பாக, கொழும்பிலுள்ள மாணவர்கள் மாத்திரமன்றி, கண்டி, காலி, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் போன்ற நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்படுத்தி பயன் பெறுவதாக SLIIT கண்டறிந்துள்ளது.
இந்த கொரோனாவைரஸ் தொற்று காணப்படும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு கால அட்டவணைகள் கிடைப்பதை தாமதிக்காமல், ஒன்லைன் ஊடாக பரீட்சைகளை முன்னெடுப்பதற்கு SLIIT திட்டமிட்டுள்ளது. மேலும், ஒன்லைன் ஊடாக எதிர்காலத்தில் அறிமுக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு உதவிகளை பெற்றக் கொடுப்பதற்காக மேம்படுத்திய கட்டமைப்பை வழங்குவதுடன், விரிவுரையாளர்களுக்கு bookmarking ஊடாக பிரதான பகுதிகளை அடையாளமிடக்கூடிய வசதியும் காணப்படுகின்றன. முக்கியமான பாடங்களை சாராம்சப்படுத்தி அவற்றுக்கு உதவிகளை வழங்குவதுடன், ஒரு கோர்ப்பில் இவை அடங்கியிருக்கும்.
ஒன்லைன் கற்கை ஊடாக தொடர்பாடல்களை பேணுவதற்கு Webex மற்றும் Zoom ஆகியவற்றினூடாக தொடர்பாடல்களை பேணி, ஓஃவ்லைனில் பார்வையிடக்கூடிய வசதிகளையும் SLIIT வழங்குகின்றது. இந்த முறையினூடாக, விரிவுரையாளர்களுடன் வீடியோ ஊடாக நேரடியான கலந்துரையாடி தமது சந்தேகங்களை மாணவர்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு சிறந்த ஒன்லைன் கற்கைகளை பெற்றுக் கொடுப்பதற்காக தமது ஒன்லைன் கற்பித்தல் கட்டமைப்பையும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago