2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எபிக் லங்காவுடன் சம்பத் வங்கி கைகோர்ப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் வங்கி பிஎல்சி. தனது 'முகவர் வங்கியியல்' (Agent Banking)  தீர்வை அபிவிருத்தி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அண்மையில் எபிக் லங்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாடெங்கும் அதிகரித்துச் செல்கின்ற வாடிக்கையாளர்களைத் தம்முடைய சேவை சென்றடைவதை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமைந்துள்ள அதேநேரம், தேசிய தூரநோக்கு அடிப்படையில் நிதிசார் சேவைகளை உட்சேர்த்தலை ஊக்குவிக்கின்ற செயற்பாடாகவும் காணப்படுகின்றது. முகவர் வங்கியியலின் அறிமுகத்துடன், சம்பத் வங்கியானது மற்றுமொரு முதன்முதலான சேவையை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.  

எபிக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் உலகத்தரம் வாய்ந்த இந்த புத்தாக்கம் தொடர்பில் சம்பத் வங்கி பி.எல்.சி. முகாமைத்துவ பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி அரவிந்த பெரேரா கூறுகையில், 'எபிக் லங்கா நிறுவனம் போன்ற இலங்கை தொழில்நுட்பத் துறையில் தலைமை ஸ்தானத்தில் உள்ள ஒரு நிறுவனத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகளில் சம்பத் வங்கி அடுத்த மட்டத்திற்கு முன்னேறுவதுக்கு இவ்வுற்பத்தி நிச்சயமாக வங்கிக்கு உதவும். அது, எம்முடைய சேவை விநியோக வழிமுறைகளை மேலும் பலப்படுத்தும் அதேநேரத்தில், செலவுச் சிக்கனமான முறையில் புதிய சந்தைகளுக்கு எமது சேவைகள் சென்றடைவதற்கும் வசதியளிக்கின்றது.

அதுமட்டுமன்றி இந்த முன்னெடுப்பு, எமது நாட்டின் நிதி உட்சேர்க்கை  (financial inclusion) இலக்குகளை அடைந்து கொள்ளும் விடயத்தற்கும் கணிசமானப் பங்களிப்பைச் செய்யும்' என்றார்.  ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் வங்கியின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான நந்த பெர்ண்hண்டோ கூறுகையில், 'எதிர்கால வங்கியியல் போக்குகளுக்கு ஒத்திசைவாக செயற்பட வேண்டுமாயின் சம்பத் வங்கியைச் சேர்ந்த எமக்கு, சௌகரியமான சேவையை வழங்குதல், சேவையின் அடைவு எல்லையை விஸ்தரித்தல், வங்கிச் சேவை கிடைக்காத (Un-banked)  மற்றும் குறைந்தளவு வங்கிச் சேவையைப் பயன்படுத்துகின்ற  (under-banked) பிரிவினருக்கு சேவையாற்றுதல் ஆகியவை முக்கியமாக முன்னுரிமை அளிக்கப்படும் விடயங்களாக உள்ளன. எனவேதான் இந்த உற்பத்தியில் நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம். இந்த தீர்வின் மூலமாக, எமது வங்கியியல் உற்பத்தி, சேவைகளை 'ஒன்லைன' அடிப்படையில் நிகழ்நேரத்திலேயே விநியோகிப்பதற்கு பல முகவர்களை நியமிக்கவுள்ளோம்.

தற்போதிருக்கும் எமது 226 கிளைகளுக்கும் மேலதிகமானதாக இவர்கள் காணப்படுவர். இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, இலங்கையிலும் இப்பிராந்தியத்திலும் ஒரு முகவர் வங்கியியல் வணிக மாதிரியை அமுல்படுத்திய முதலாவது வங்கி என்ற பெருமையை நாம் பெற்றுக் கொள்கின்றோம். இது, இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் எமக்கும் ஒரு பெருமைக்குரிய சாதனையாக இருக்கும்' என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X